நிலவில் தேசியக் கொடியை நட்ட நாடுகளில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா. இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் இந்திய நேரப்படி இன்று(நவ.14) இரவு எட்டு முப்பதுக்கு நிலவில் இறங்கியுள்ளது.
இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்திருக்கிறது. இந்த விண்கலத்தை நிலவுக்கு மேலே நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வர முடிவு செய்திருந்தார்கள்.
நேற்று மாலை நிலாவை நெருங்கி வந்த விண்கலத்தை அதில் உள்ள மோட்டாரை இயக்கி நூறு கிலோமீட்டர் தூரத்தில் சரியான இடத்தில் நிலை நிறுத்தினார்கள்.
விண்கலத்தில் 'மூன் இம்பேக்ட் பிராய்' என்ற ஆராய்ச்சி கருவி உள்ளது. இது விண்கலத்தை விட்டு தனியாக பிரிந்து நிலவில் இறங்கியது..
இந்த ஆராய்ச்சி கருவி நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். இந்த கருவியில் இந்திய தேசியக் கொடி அனுப்பிவைக்கப்பட்டது. . இந்த கருவி அந்த தேசியக் கொடியை நிலவில் நட்டு வைத்தது.
ரஷ்யா, அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா தேசியக்கொடியை நிலவில் நட்டுள்ளது. இந்த சாதனை இந்தியா முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment