Monday, November 17, 2008

ஈராக்கில் இருந்து வாபஸ்:ஒபாமா

lankasri.comஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படும் என்றும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்றும் புதிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரக் ஒபாமா அபார வெற்றி பெற்றார்.

ஜனவரி 20ந் தேதி அவர் அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.இந்நிலையில் அதிபராக வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.அந்த பேட்டியில் அவர்,ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.அதே போல சர்ச்சைக்குரிய கவுதநாமோ சிறைச்சாலை மூடப்படும் என்று கூறியுள்ளார்.

தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சின் கொள்கை முடிவுகளில் இருந்து இவை முக்கிய மாறுபாடுகளாகும்.பொருளாதார சீர்குலைவில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஒபாமா கூறியுள்ளார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1226914343&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails