|
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கில் கிறிஸ்ட். ஓய்வு பெற்ற அவர் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் அந்த புத்தகம் வெளியாகிறது. இதில் தெண்டுல்கரின் விளையாட்டு உணர்வு குறித்தும், நேர்மை குறித் தும் விமர்சனம் செய்து இருந்ததாக தகவல் வெளியானது. இனவெறி விவகாரத் தில் ஹர்பஜன் சிங்கிடம் நடத்திய விசாரணையில் தெண்டுல்கர் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்து இருந்தார் என்றும் தகவல் வெளியானது. இதை கில் கிறிஸ்ட் மறுத்துள்ளார். தெண்டுல்கரை தான் மிகவும் மதிப்பதாகவும், அவரை பொய்யர் என்றும் கூறவில்லை என்று தெரிவித்து இருந்தார். இது குறித்து முதலில் எதுவும் தெரிவிக்காத தெண்டுல்கர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- கில்கிறிஸ்டின் அறிக்கை சிறுபிள்ளை தனமானது. இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. நான் கிரிக்கெட்டை நேசிப்பவன். நான் எப்போதுமே அன்பானவன். சிட்னி டெஸ்டில் தோல்வி அடைந்தபோது முதன் முதலில் கை கொடுத்தது நான் தான். நாங்கள் விளையாட்டு உணர்வு கொண்டவர்கள். என்னை பொறுத்தவரை கில் கிறிஸ்ட் அறிக்கை தேவையில்லாத ஒன்றாகும். அது அவரது கருத்து. ஆனால் எனக்கு அது கவலை அளிக்கிறது. இதோடு இந்த விவகாரம் முடிந்து விட்டது. இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1225203818&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment