Sunday, November 9, 2008

அறிமுக டெஸ்டிலேயே 8விக்கெட் வீழ்த்தி கிரெஜ்சா சாதனை

 
lankasri.comஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் (ஆப்-ஸ்பின்னர்) 25வயதான ஜேசன் கிரெஜ்சா தனது முதல் சர்வதேச டெஸ்டிலேயே பிரமிக்க வைத்திருக்கிறார்.இந்தியாவின் நேற்றைய 5விக்கெட்டுகளையும் சாய்த்த அவர் முதல் இன்னிங்சில் 43.5ஓவர்கள் பந்து வீசி 215ரன்கள் விட்டுகொடுத்து 8விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சிலேயே 8விக்கெட்டுகளை அள்ளிய 6-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஆல்பர்ட் திரோட் (8-43, இங்கிலாந்து எதிராக,அடிலெய்டு,1895),ஆஸ்திரேலியாவின் பாப் மஸ்சி (8-53, இங்கிலாந்து எதிராக, லார்ட்ஸ்,1972),இந்தியாவின் நரேந்திர ஹிர்வானி (8-61,வெஸ்ட் இண்டீஸ் எதிராக,சென்னை,1988),தென்ஆப்பிரிக்காவின் குளுஸ்னர் (8-64,இந்தியா எதிராக,கொல்கத்தா,1996),வெஸ்ட் இண்டீசின் அல்ப் வாலட்டின் (8-104,இங்கிலாந்து எதிராக,மான்செஸ்டர் 1950) ஆகியோர் தங்களது முதல் இன்னிங்சிலேயே 8விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்கள்.இதில் பாப் மஸ்சி,ஹிர்வானி ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் 8விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

கிரெஜ்சா ஒரு பக்கம் அற்புதம் நிகழ்த்தி இருந்தாலும்,மறுபுறம் மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராகி இருக்கிறார்.அதாவது அறிமுக இன்னிங்சிலேயே அதிக ரன்களை (215 ரன்கள்) வாரி வழங்கியவர் கிரெஜ்சா தான்.இதற்கு முன்பு அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓமரி பேங்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (2003-ம் ஆண்டு) தனது முதல் இன்னிங்சில் 3விக்கெட்டுகள் எடுத்து 204 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

கிரெஜ்சாவுக்கு முதல் 3டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. காரணம்,டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஐதராபாத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் அவர் 199ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.இதனால் அவர் மீது ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.அதே சமயம் முதல் 3 டெஸ்டிலும் சேர்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் கேமரூன் ஒயிட் சோபிக்கவில்லை.இதனால் முக்கியமான இந்த போட்டிக்கு அழைக்கப்பட்ட கிரெஜ்சா,முதல் டெஸ்டிலேயே எல்லோரது கவனத்தையும் கவர்ந்து விட்டார்.

ஹர்பஜன்சிங் 300

இந்திய சுழற்பந்து வீச்சாளர் 28வயதான ஹர்பஜன்சிங் நேற்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங்கை 10-வது முறையாக தனது பந்து வீச்சில் ஆட்டம் இழக்கச் செய்தார்.இது ஹர்பஜன்சிங்கின் 300-வது விக்கெட்டாக அமைந்தது மேலும் சிறப்புக்குரியதாகும்.இந்திய மண்ணில் மட்டும் 200விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

தனது 72-வது டெஸ்டில் விளையாடி வரும் ஹர்பஜன்சிங்,கும்பிளே (619 விக்கெட்,132 டெஸ்ட்),கபில்தேவ் (434 விக்கெட்,131 டெஸ்ட்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 300 விக்கெட் மைல்கல்லை எட்டிய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.மேலும் உலக அரங்கில் இச்சிறப்பை பெற்ற 22-வது வீரர் ஆவார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226156586&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails