நாக்பூரில், இன்று இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் 40வது சதம் அடித்து சாதனை படைத்தார்.
முன்னதாக நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில், 1க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் ஷேவாக்கும், தமிழக வீரர் விஜய் முரளி களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய ஷேவாக், 45 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 50 ரன்களை எடுத்தார். விஜய் 33 ரன்களை எடுத்தபோது, ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 98 ரன்களை எடுத்திருந்தது. 19வது ஓவரில் 100வது ரன்னை இந்தியா எட்டியிருந்தது. ராகுல்டிராவிட்டும், ஷேவாக்கும், புதுமுக வீரர் கிரெஜ்ஜா பந்தில் அவுட் ஆனார்கள். 116வது ரன்னில் 3 விக்கெட்டை இழந்த நிலையில், 4வது விக்கெட்டுக்கு டெண்டுல்கருடன், லட்சுமண் ஜோடி சேர்ந்தார். பிற்பகல் நிலவரப்படி, இந்தியா 34வது ஒவரில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்திருந்தது. இதனையடுத்து, டெண்டுல்கர் 109 ரன்களை எடுத்து, 40வது சதம் அடித்து சாதனை படைத்தார். அப்போது, ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இறுதியாக, இன்று நடைபெற்ற முதல் இன்னிங்சில், இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இன்று நடந்த போட்டியில், இந்திய அணி வீரர்கள் விறுவிறுப்பாக ஆடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
source:kumudam.com
No comments:
Post a Comment