|
"ஓய்வு பெறும் கங்குலியை நிச்சயமாக "மிஸ்" பண்ணுவேன்.களத்தில் நெருக்கடியான நேரங்களில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வோம். அவருடன் வங்கமொழியில் தட்டுத் தடுமாறி பேசுவேன்.அப்போது "டென்ஷன்" பறந்து போய் "ரிலாக்சான" சூழ்நிலை ஏற்படும்," என சச்சின் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இந்தியா,ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடக்கிறது.முதல் இன்னிங் சில் சச்சின்(109),கங்குலி(85) இணைந்து,இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஓய்வு இல்லை:டெஸ்ட் அரங்கில் 40வது சதம் அடித்த சச்சின் ஓய்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை என உறுதியாக தெரிவித்தார். இது குறித்து சச்சின் அளித்த பேட்டி:நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்.தற்போது ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை.நான் நிகழ்காலத்தை மட்டும் சிந்திப்பவன். அடுத்த நான்கு அல்லது 6 ஆண்டுகளில் என்ன செய்யப் போகிறேன் என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது கிடையாது. ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தால்,உடனடியாக அனைவருக்கும் தெரிவிப்பேன்.இது பரபரப்பான செய்தியாக இருக்கும் என்பதை அறிவேன்.ஆனாலும் தவறான செய்தி அல்ல என்பதால்,யாரிடமும் மறைக்க வேண்டியதில்லை.இப்போட்டியுடன் கங்குலி ஓய்வு பெறுவது வருத்தமான விஷயம்.அவருடன் இணைந்து பேட் செய்வது "ஸ்பெஷல்" அனுபவம்.இக்கட்டான நேரங்களில் இருவரும் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கொள்வோம்.இது போன்ற தருணங்களில் 100சதவீத கவனம் செலுத்த வேண்டும். அதிக கவனம் தேவைப்படாதபட்சத்தில் "ரிலாக்சாக"இருக்க வேண்டும்.இதனை உணர்ந்து சரியோ,தவறோ,எனக்கு தெரிந்த வங்கமொழியில் கங்குலியுடன் பேசுவேன்.அப்போது இறுக்கமான நிலை மாறி"ரிலாக்சான" சூழல் ஏற்படும். பின்னர் இருவரும் இயல் பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.12ஆண்டு காலம் இருவரும் விளையாடியுள்ளோம். வரும் போட்டிகளில் கங்குலியை நிச்சயமாக "மிஸ்" பண்ணுவேன். ஸ்ரீகாந்த் மகிழ்ச்சி:எனது 19ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு கேப்டன்களை சந்தித்துள்ளேன்.அனைவரிடமும் வித்தியாசமான அணுகுமுறையை காணலாம்.ராகுல் டிராவிட் எப்போதும் "சீரியசாக"இருப்பார்.ஆட்டத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்."டிரஸ்சிங் ரூமில்"கூட அமைதி நிலவ வேண்டுமென விரும்புவார். எனது 16 வயதில் ஸ்ரீகாந்த் தலைமையில் தான் முதன் முதலாக விளையாடினேன். அப்போது வீரர்கள் "டென்ஷனாக" இருந்தால்,"ஜோக்" அடித்து கலகலப்பான நிலைமையை ஏற்படுத்துவார். தற்போது எனக்கு 35வயதாகிறது.இப்போதும் ஸ்ரீகாந்த் என்னிடம் "ஜோக்"அடிப்பது உண்டு.ஸ்ரீகாந்தை போல கங்குலியும் "ஜாலியான" வீரர்.அவ்வப்போது நகைச்சுவையாக பேசி,வீரர்கள் மத்தியில் காணப்படும் நெருக்கடியை போக்குவார். இவ்வாறு சச்சின் தெரிவித்தார். 2011 உலக கோப்பை?:இந்திய துணை கண்டத்தில் வரும் 2011ல் நடக்க உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவிக்க சச்சின் மறுத்தார்.இவர் கூறுகையில்,"அடுத்து விளையாட உள்ள போட்டியை பற்றி தான் முதலில் சிந்திப்பேன்.2011,உலக கோப்பை போட்டிக்கு சுமார் 900நாட்கள் உள்ளன.தற்போதைக்கு நாக்பூர் டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்," என்றார். |
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1226157315&archive=&start_from=&ucat=4&
No comments:
Post a Comment