அல்கொய்தா இயக்கத்தில் பின்லேடனின் செல்வாக்கு குறைகிறது |
|
சர்வதேச தீவிரவாதி அல்கொய்தா தலைவன் பின்லேடனை அமெரிக்கா பல ஆண்டுகளாக தேடியும் அவன் பிடிபடவில்லை.பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது.ஆனாலும் அவனை பிடிக்க முடியவில்லை. பின்லேடன் பற்றி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.கூறும்போது பின்லேடன் செல்வாக்கு குறைந்து விட்டது.அவன் தனிமை படுத்தப்பட்டு விட்டான் என்று கூறியுள்ளது. சி.ஐ.ஏ. டைரக்டர் மைக்கேல் ஹேடன் கூறியதாவது:- தனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பின்லேடன் மாறி மாறி செல்கிறான்.உயிர் தப்புவதிலேயே பின்லேடன் முழு கவனம் செலுத்தி வருகிறான்.முன்புபோல பின்லேடனால் திறமையாக செயல்பட முடியவில்லை.தனது இயக்கத்தினருடன் தொடர்பும் துண்டிக்கப்பட்டு பின்லேடன் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறான்.பின்லேடனுக்கு முன்பு இருந்த செல்வாக்கும் குறைந்து விட்டது. ஆனால் அல்கொய்தா இயக்கத்தின் பலம் குறைந்து விடவில்லை.அமெரிக்காவுக்கு இன்னும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது.அமெரிக்காவுக்கு எப்போதும் அல்கொய்தா இயக்கத்தால் ஆபத்துதான். பாகிஸ்தானில் அல் கொய்தா இயக்கத்தினரின் பயிற்சி முகாம் உள்ளது.இவ்வாறு மைக்கேல் ஹேடன் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment