அனாப்பூர், நவ. 14-
மராட்டிய மாநிலம் மலேகானில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கான்பூரை சேர்ந்த சாமியார் தயானந்த் பாண்டேவுக்கு மலேகான் குண்டு வெடிப் பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மராட்டிய போலீ சார் அவரை கைது செய்தனர். இருவரையும் போலீசார் இன்னும் 2 நாட்களில் நாசிக் கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சாமியார் தயானந்த் பாண் டேவுக்கு முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள் ளது.
தொடக்கத்தில் தயானந்த் பாண்டே 1989-ல் தேசிய பாதுகாப்பு படையில் சேர்ந்தார். ஆனால் அடுத்த ஆண்டே அங்கிருந்து வெளி யேறினார். அவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் வர லாறு, புவியியல், தத்துவம் ஆகிய பிரிவுகளில் முது நிலைப்பட்டம் பெற்றார்.
இவருக்கு பரிதாபாத் அடுத்த அனாப்பூர் கிராமத் தில் உள்ள மாதா சக்ரேஸ்வர் ஹரி பர்பட் கோவில் அருகே விருந்தினர் மாளிகை உள்ளது. அங்குதான் அவர் முக்கிய அரசியல் பிரமுகர்களை ரகசியமாக சந்தித்தார்.
டெல்லியை சேர்ந்த முன் னாள் பா.ஜனதா எம்.பி. சர்மா, கோவிந்தாச்சார்யா, காங்கிரஸ் பிரமுகர் மகன்லால் ஆகியோர் சாமியார் தயானந்த் பாண்டேவுடன் நெருங்கிய தொடர்பு வைத் திருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது.
சாமியார் நடத்தி வந்த சர்வாக்கிய பீடம் சார்பில் "ஜெகத்குரு சங்கராச்சாரியா சுவாமி அமிதானந்த் தேவ் டீர்த் என்ற பெயரில் வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. அதில் அவருடன் தொடர்பு வைத்திருந்த இந்து அமைப்பு தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், பெண்கள் பெயர்கள் இடம் பெற்றுள் ளது.
No comments:
Post a Comment