அமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா"வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.
இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment