| | சிகிச்சை அளித்தாலும் பிழைப்பது கடினம் என்று டாக்டர்கள் வகவிரித்து விட்டபின் எதற்காக சிகிச்சை.நான் என் குடும்பத்தினருடன் கடைசி வாழ்நாளை சந்தோஷமாக கழித்து விட்டு,சந்தோஷமாகவே சாக விரும்புகிறேன்.இவ்வாறு அதிரடியாக கோர்ட்டில் வாதாடியிருப்பவர் பிரிட்டனை சேர்ந்த 13வயது பள்ளி மாணவி,ஹன்னா ஜோன்ஸ். சிகிச்சை பலனளிக்காது என்பதால்,சிகிச்சை பெற மறுத்த பிரிட்டிஷ் பள்ளி மாணவிக்கு அந்நாட்டு கோர்ட் அனுமதி அவள் விருப்ப்படி கடைசி நாட்களை சந்தோஷமாக அனுபவிக்க அனுமதி அளித்திருக்கிறது.
பிரிட்டனில் உள்ள ஹியர்ஃபோர்ட்ஷயர் நகரை சேர்ந்தவர் 13வயது பள்ளி மாணவி ஹன்னா ஜோன்ஸ்.லூகேமியா நோயால்( ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் இருப்பதால் வரும் நோய் ) பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அதற்காக மருந்துக்களை சாப்பிட,அது பக்க விளைவுகள ஏற்படுத்தி,அதன் காரணமாக அவரது இதயத்தில் ஓட்டை விழுந்து விட்டது. இப்போது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைக்காக மருத்துவமனை செல்ல,அங்குள்ள டாக்டர்களோ இவளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்றும்,ஆனால் அந்த சிகிச்சையை அளித்தாலும் அவள் பிழைப்பது கடினம் என்றும் சொல்லி விட்டார்கள்.ஒரு வேளை பிழைத்துக்கொண்டாலும் கூட அவளது உடல் நிலை மிக மோசமான நிலைக்கு வந்து விடும் என்றும் சொல்லி விட்டார்கள். சிகிச்சை அளித்தாலும் பிழைக்க மாட்டேன் என்றால் எதற்காக சிகிச்சையை எனக்கு அளிக்க வேண்டும் என்று அந்த சிறுமி சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து விட்டாள்.எவ்வளவோ சொல்லி பார்த்தும் அந்த சிறுமி சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து விட்டதால் மருத்துவ அதிகாரிகள் அவள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விட்டனர். அவளை சிகிச்சையை ஏற்றுக்கொள்ள கோர்ட் வற்புறுத்த வேண்டும் என்று அவர்கள் கோர்ட்டில் வாதாடினர்.ஆனால் அந்த பெண்ணோ,சிக்கலான இந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்வதா,வேண்டாமா என்று நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று வாதாடினாள்.இந்த வேதனை மிகுந்த சிகிச்சை எனக்கு வேண்டாம் என்றும் அவள் கோரிக்கை வைத்தாள். இந்த வழக்கில் அந்த பெண் தான் வெற்றி பெற்றாள்.அவள் விருப்பப்படியே,அவளுடைய எஞ்சிய வாழ்நாட்களை அவளது அப்பா,அம்மா,மற்றும் குடும்பத்தாருடன் சந்தோஷமாக கழித்து விட்டு சந்தோஷமாக இறந்து போக கோர்ட் அனுமதி அளித்து விட்டது. | | |
No comments:
Post a Comment