|
|
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் மெக்கைன் போட்டியிட்டார்.72வயதாகும் இவர் வியட்நாம் போரில் ஈடுபட்டவர். இவர் அதிபர் தேர்தலில் தோற்றுப் போனார்.தனதுசொந்த மாநிலமான அரிஜோனாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.அப்போது தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும்,வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார். அவர் மேலும் பேசுகையில்,அமெரிக்கர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நமது பேரக்குழந்தைகளுக்காக,எதிர்கால சந்ததியினருக்காக அமெரிக்காவை வலிமையான நாடாக விளங்க உழைப்போம்.அமெரிக்காவை எதிர் நோக்கியுள்ள சவால்களை சந்திக்க ஒபாமாவுக்கு நான் முழுஒத்துழைப்பு அளிப்பேன் என்றார். ஒபாமாவுக்கு அமெரிக்க அதிபர் புஷ் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.அப்போது புஷ்கூறியதாவது:- அமெரிக்காவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட உங்களை என் சார்பிலும் என் மனைவி சார்பிலும் வாழ்த்துகிறேன்.அத்துடன் உங்களுடன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உங்களதுகுடும் பத்தினருக்கும்,ஆதரவாளர்களையும் வாழ்த்துகிறேன். வாழ்க்கையில் நெடியபயணம் மேற்கொண்டுள்ளீர்கள்.அதை எளிமையாக நடக்க உதவுவேன் என உறுதியளிக்கிறேன்.வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியை சந்தோஷமாக கொண்டாடுங்கள். இவ்வாறு புஷ் கூறினார். ஒபாமாவையும் அவரது குடும்பத்தினரையும் வெள்ளை மாளிகைக்கு விரைவில் வருமாறும் புஷ் அழைப்பு விடுத்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டன்,அவரது மனைவி கிளாரி கிளிண்டன்,பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர் கோசி,நியூசிலாந்து அதிபர் ஹெலன் கிளார்க் மற்றும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும்,பாரதீய ஜனதா சார்பில் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரும் வாழ்த்து தெரி்வித்துள்ளார்கள். ஒபாமாவுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்சிங்சத்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒபாமாவை வாழ்த்துகிறேன்.உங்கள் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்திய தேசிய ஓவர்சீஸ் காங்கிரஸ் பொது செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் புஷ் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் மக்களிடையேயான நட்புறவும் வளர்ந்து வரலாற்று சாதனை படைத்தது. அது தங்கள் ஆட்சியிலும் நீடிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். |
No comments:
Post a Comment