|
|
தாஜ் ஓட்டலில் தீவிரவாதி கள் பிடியில் 6 எம்.பி.க்கள் சிக்கி இருக்கிறார்கள். கேரள மாநில மார்க் சிஸ்டு கம்念2985;ிஸ்டு எம்.பி. கிருஷ்ணதாஸ் தலைமையிலான சட்ட துணைக்குழு நேற்று மும்பையில் ஆய்வு நடந்தியது. இதில் 6 எம்.பி.க்கள் இருந்தனர். பணி முடிந்த தும் அவர்கள் இரவு தாஜ் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது தான் தீவிரவாதிகள் அங்கு புகுந்து சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கு இருந்தவர்களை சிறை பிடித்தனர். அதில் 6 எம்.பி.க் களும் இருந்தனர். கிருஷ்ணதாஸ் எம்.பி. அவர் களிடம் சிக்கி இருப்பது உறுதியாக தெரிந்து உள்ளது. மற்ற எம்.பி.க்கள் என்ன ஆனார்கள்ப என்று தெரியவில்லை. அவர்களும் அங்கே தான் சிக்கி இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். நிருபர்களிடம் பேசினார் தீவிரவாதிகளிடம் சிக்கி இருக்கும் கிருஷ்ணதாஸ் நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:- நாங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது 2 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டப்படியே நாங்கள் இருந்த உணவு அறைக்குள் வந்தனர். உடனே ஓட்டல் ஊழியர்கள் எங்களை அங்குள்ள சமையல் அறைக்கு அருகே இருந்த சரக்கு அறைக்குள் உள்ளே தள்ளி பூட்டினார்கள். இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அறைக்கு வெளியே துப்பாக்கியால் சுடும் சத்தமும் குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்கிறது. நாங்கள் இருக்கும் இடத்துக்கும் இன்னும் போலீஸ் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மற்ற 5 எம்.பி.க்கள் யார்? அவர்கள் உள்ளேதான் சிக்கி இருக்கிறார்களா? அல்லது தப்பி விட்டார்களா என்று சரியாக தெரியவில்லை. அங்கு தீவிரவாதிகள் பிடி யில் மொத்தம் 15 பேர் இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அதில் 7 பேர் வெளிநாட்டினர். ராஜேஷ்பட்டேல் என்ற லண்டன் தொழில் அதிபரும் தீவிரவாதிகளிடம் சிக்கி னார்கள். ஆனால் அவர் நைசாக தப்பி வெளியே வந்து விட்டார். |
No comments:
Post a Comment