விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை மறு தினம் ஐம்பத்து நான்காவது பிறந்த நாள். இந்த தினத்தை மாவிரர் தினமாக கொண்டாட புலிகள் முடிவுசெய்துள்ளனர்.
கடந்த 1972 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்து 1982 ம் ஆண்டு நவம்பர் 27 ம் தேதி அன்றுதான் அந்த அமைப்பின் முதல் நபரை ராணுவம் கொன்றது. அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் கடைசிவாரத்தை மாவீரர்கள் வாரமாக கடைப்பிடித்து வருகின்றனர் புலிகள்.
நவம்பர் இருபத்து ஆறாம் தேதி அதாவது நாளை மறு நாள் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளில், விடுதலைப்புலிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் வகையில் எழுச்சி உரை ஆற்றுவது பிரபாகரனின் வழக்கம்.
இந்த வருட பிறந்த தினத்தில் இலங்கை ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபாகரனின் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கு.
இந்த வருட பிறந்த தினத்தில் இலங்கை ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபாகரனின் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கு.
No comments:
Post a Comment