மீரட்டில் குண்டுவெடிப்பு:5பேர் பலி (பட இணைப்பு) |
திகதி : Saturday, 08 Nov 2008, [Sindhu] |
உத்தரப்பிரதேசத்தில் மீரட் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5பேர் உயிரிழந்தனர்.மீரட்டின் ஜாகீர் நகர் என்ற இடத்தில் உள்ள பெங்காலி பஸ்தி பகுதியில் இன்று மாலை இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.குப்பைத் தொட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பில் 5பேர் உயிரிழந்ததாகவும் 6பேர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.போலீஸசாருக்கு முன்னர் அப்பகுதிக்கு வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும்,பொதுமக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நிகழ்ந்த மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் ராம் பாபு என்பவர் கூறும் போது,"கடையில் வழக்கம் போல பாட்டில்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.அப்போது திடீரென பயங்கரமான வெடிச்சப்தம் கேட்டது.நான் கீழே விழுந்து விட்டேன்.எழுந்து பார்த்த போது பலர் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர்" என்று தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு தீவிரவாத நடவடிக்கை காரணமல்லகழிவுப் பொருள்களுடன்,வெடிக்கும் தன்மையுடைய ராணுவ பீரங்கி குண்டு எவ்வாறு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு பீரங்கி குண்டுகள் ஏதும் அப்பகுதியில் உள்ளதா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பி.கே.ராமசாஸ்திரி தெரிவித்தார். எனினும்,குண்டுவெடிப்பு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்திருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. |
No comments:
Post a Comment