Saturday, May 2, 2009

கடலுக்கடியில் கருபுலிகளின் தாக்குதல்-ராணுவ டோராப்படகுகள் தப்பியோட்டம்

புலிகளின் சுழியோடும் பிரிவினர் கடலுக்கடியில் தாக்குதல் டோராப்படகுகள் தப்பியோட்டம்

கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த கடற்படையினர் இந்த ஆழ் கடல் தாக்குதல் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் மிக அருகாமையில் நிலைகொண்டிருந்த இப் படகுகள் தற்போது ஆழ்கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டைவாய்கால் பகுதியிலும் கடும் சமர் இடம்பெற்றுவருவதாகவும், இருப்பினும் இராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails