செல்போனில் ஜெ.பிரச்சாரம்
நான் ஜெயலலிதா பேசுகிறேன்-----:செல்போனில் ஜெ.பிரச்சாரம்
லோக்சபா தேர்தலுக்காக அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா குரலில் ஒலிக்கும் மொபைல் போன் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தேர்தல் கமிஷன் பிறப்பித்த அதிரடி உத்தரவால் கட்சியினர் தொழில்நுட்ப பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ்., இ-மெயில், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
எப்.எம்., ரேடியோவிலும் விளம்பரம் செய்யப்படுகின்றன. தி.மு.க., சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வரவேற்பாளர்களை பணியமர்த்தி தொகுதியில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் தொடர்பு கொண்டு ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க., சார்பிலும் மொபைல்போன் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தொலைபேசி ஒன்றில் இருந்து வரும் அழைப்பை 'ஆன்' செய்தால், ஜெயலலிதாவின் குரலில் இரண்டு நிமிடம் வரை பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அந்த பிரச்சாரம்,'நான் ஜெயலலிதா பேசுகிறேன்,' என்று துவங்குகிறது. பின், தேர்தல் வாக்குறுதிகளை கூறி அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சின்னங்களுக்கு ஓட்டளியுங்கள்' என்று கூறி பிரச்சாரம் நிறைவடைகிறது
No comments:
Post a Comment