நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தனக்கு தெரிந்த பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என நோர்வே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக இருந்த போதும், அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.... "இது மிகவும் கோரமானது" என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.வீரச்சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த சீவரத்தினம் புலித்தேவன் நோர்வேக்கு பல தடவைகள் வருகை தந்ததாகவும், தனது வீட்டிற்கும் அவர் வருகை தந்தவர் எனவும் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். புலித்தேவனுடன் தான் கடந்த ஞாயிற்ற்க் கிழமை தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளர்கள் என தெரிவித்தார். அவருடன் நடு இரவில் உரையாடியதாகவும், உரையாடும் போது வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்தார்.அதன் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு விடுதலைப் புலிகள் தெரிவித்ததை அறிவித்ததாகவும்,இன்று காலையில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அறிந்ததாகவும் எரிக் சொல்கைம் தெரிவித்தார். புலித்தேவன் மற்றும் பா.நடேசன் வீரச்சாவடைந்துள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும்,அந்தச் செய்தி ஆதாரம் அற்றது என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். சொல்கைம் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசு, தமிழ் மக்கள் தங்களை ஆளும் வகையிலான தீர்வினை முன்வைக்க வேண்டும். அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய தீர்வு வேண்டும். தமிழ் மக்கள் ஆளும் வகையிலான என்று நான் தெரிவிப்பது பலவறைக் குறிக்கும். போர்ப் பகுதிக்கு சர்வதேச தொண்டர் அமைப்புக்களையும், ஐ.நா அமைப்புக்களையும் இலங்கை அரசு உடனே அனுமதிக்க வேண்டும் என எரிக் சொல்கைம் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக நோர்வே ஐரோப்பிய ஒன்றியம்,ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து உதவிகளை செய்யும் என எரிக் சொல்கைம் மேலும் தெரிவித்தார் |
No comments:
Post a Comment