Monday, May 25, 2009

தலைவர் பிரபாகரன் பற்றி பத்மநாதன் வெளியிடப்பட்ட செய்தி ஒரு சர்வ தேச சதிச்செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

 

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

லங்கா தீபா என்ற சிங்களப் பத்திரிகையில் „காட்டிலிருந்து தப்பிய புலிகளை கட்டுப்படுத்தல்...'என்ற கட்டுரை வடிவிலான செய்தியை உலகத்தமிழ் செய்திகள் இணையத்தளம் 22.05.09 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.


இவ்வாய்வுக் கட்டுரையின் கருத்து மையமாக லங்காதீபா பத்திரிகை புலம்பெயர் மக்களின் தமிழீழ விடுதலைக்கான எழுச்சியை தளர்நிலைக்கு கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் திரு.கே.பத்மநாதனை குறி வைத்து இலங்கை அரசு செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.


இதனடிப்படையில் இன்று திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரின் மரணம் தொடர்பானதாக கூறப்பட்ட செய்தியாகும்.


ஒரு முக்கியமான விடயத்தை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் மனக் கிலேசமடையவோ அல்லது கலக்கமடையவோ தேவையில்லை. புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.


தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காக பல சதிகள் இடம்பெறுகின்றன. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு பாதுகாப்பாக இருக்கிறார்.அவரின் பாதுகாப்பான இடத்தை அறிய முயற்சிக்கும் நடவடிக்கைகளே இன்று வெளிவந்த அறிக்கை.


சர்வதேசத்திற்கு பொறுப்பாக  ஒருவரை நியமித்து அவரின் அறிவித்தல்கள் மூலமாக தமிழர்களை முரண்பட வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போரில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பிளவுபட வைப்பதன் நோக்கமாக இந்த அறிவித்தல்களை நோக்க வேண்டியள்ளது.


திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தகவலானது அவருக்கு அதற்கான நெருக்கடி ஏன் எந்தச் சூழ்நிலையைக் கொண்டது என்பதை மிகவும் தெளிவு பெற வேண்டும்.


சம்பந்தப்பட்ட அறிக்கை நிச்சயமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட  செயலாகும்.


சர்வதேச உளவு நிறுவனங்களின் முனைப்பான செயல்பபாடுகளுக்குள் சர்வதேசத் தொடர்பாளர் சிக்குண்டுள்ளார், அவர் அதற்குள்ளிருந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வரச் சில நாட்களாகும்.


புலம்பெயர் தமிழர்களையும் சர்வதேசத் தொடர்பாளரையும் முரண்பட வைக்கக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த விடயத்தில் புலம்பெயர் மக்கள் கூரான கத்தியில் நடப்பது போன்றதே.


இன்னும் கொஞ்சம் இது பற்றி ஆய்வு நோக்கில் எழுதலாம்.ஆனால் அது பாதகமான நிலையை ஏறபடுத்தும் என்பதனால் சிலவற்றை தவிர்த்துக் கொள்கின்றேன்.


எனவே திரு.கே.பியின் கடிதத்தை கருத்தில் கொண்டு உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.தமிழீழத் தேசியத்தலைவர் பாதுகாப்பாக உயிரோடு இருக்கின்றார்.இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது.அந்தக் காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.இக்கடிதம் ஒரு நிர்ப்பந்த நிலையாகக்கூட கருத இடமுண்டு.


இலங்கை ஜனாதிபதியை போர்க் குற்றவாளியாக்குகின்ற பாரிய நடவடிக்கையினை தடுக்கும் தடைகளில் ஒன்றாக இக்கடிதத்தைப் பார்க்க முடிகின்றது.


திரு.கே.பி அவர்கள் இனி ஜனநாயக ரீதியாகவே இப்போராட்டம் இடம்பெறும் என்று சொன்ன  வாரத்தைப் பிரயோகத்தின் மூலம் அவரின் இக்கட்டான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


றோ,இன்ரர்போல்,சிஐஏ போன்றவற்றின் செயல்பாடுகள் எப்படியானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். திரு.கே.பி அவர்கள் இச்சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டாரா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது.
புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழீழ உணர்வைச் சிதைக்கும் திட்டமாவே இக்கடிதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நாட்டின் மீது பிரயோகிக்கும் இராஜதந்திர அழுத்தத்தைப் போன்றதொரு அழுத்தத்தை தமிழர்கள் மீது பிரயோகிக்கபபட்டு வருகின்றது. அதற்கான காரணம் தமிழர்களின் முனைப்பான வல்லமையேயாகும்.


வன்னிநிலப்பரப்பின் படுகொலை வெளிச்சத்திற்கு வருவதைத் தடுப்பதற்கும் தடைமுகாம்களில் 10,000 புலிப் போராளிகளிருப்பதாகக் கூறி இன்னும் 10,000 தமிழர்களை படுகொலை செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கையை தமிழர்கள் அவதானிக்க தவற வேண்டும் எனபது அரசின் திட்டமிடலாகும்.


எனவே தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக வெளிவந்த செய்தி ஒரு சதிச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

-அங்கயற்பிரியன்-

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails