![]() |
இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன. அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர என மக்களால் எழுப்பப்பட்ட நினைவு கட்டடங்களின் படங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையின் இறுதி பக்கங்களில் - படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு படுகொலைகள் தொடர்பான உண்மையான பல தகவல்களை மேலும் விபரமாக ஆராய்வதாக இருந்தால் அதற்கு மேலதிக நேரமும், தகவல்களும் தேவை. ஆனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருவதனால் அவற்றை இப்போது செய்வது கடினமானது. இருந்தாலும் தற்போதைய சூழலில் எந்த அளவுக்கு முழுமையாகத் தகவல்களைத் திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன. |
Friday, May 15, 2009
61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு: ஒரு முழுமையான தொகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment