Tuesday, May 26, 2009

ஓஹோ சீக்கியர்கள் கலவரத்துக்கு இதுதான் காரணமா!!!!

சீக்கியர் கலவரம்  ஏற்பட காரணம் என்ன?

  சீக்கிய குருக்கள் 1469-ம் ஆண்டு முதல் 1708-ம் ஆண்டு வரை பாடிய பஜனை பாடல்கள், போதனைகள் குரு கிராந்த் சாகிப் என்ற புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

1430 பக்கங்கள் கொண்ட இந்த புனித நூலை சீக்கியர்கள் வணங்கி வருகிறார்கள்.

சீக்கியர்களில் அதர்மி, தேரா என்ற இரு பிரிவினர் உள்ளனர். அதர்மி இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். தேரா இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டமாட்டார்கள். அவர்கள் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் சுமார் 50 லட்சம் தலித் சீக்கியர்கள் உள்ளனர்.
 
70 ஆண்டுகளுக்கு முன்பு தேரா கச்சா பிரிவு உண்டானது. இதன் தலைவராக நிரஞ்சன்தாஸ் உள்ளார். வியன்னா சென்றிருந்த அவரது காலில் விழுந்து அவரது ஆதரவாளர்கள் வணங்கினார்கள்.


இதற்கு உயர்சாதி சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையான சீக்கியர் புனித நூலான குரு கிராந்த் சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும். யார் காலிலும் விழக்கூடாது என்று தகராறு செய்தனர்.

இந்த தகராறு முற்றி, துப்பாக்கி சூட்டில் தேரா சச்சு தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதால் கலவரம் வெடித்தது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails