Wednesday, May 13, 2009

வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா?

வன்னிக் களமுனை புலிகளின் முடிவா? முடிவின் ஆரம்பமா? வன்னியில் இருந்து பரமதயாளன்

 

ltteatkவிடுதலைப்புலிகள் தமது இறுதி மணித்துளிகளை இப்போது எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது இலங்கையின் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பு தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியிருந்த செவ்வி;.

1980கள் தொடக்கம் கடந்த மூன்று தசாப்த காலமாக கேட்டுச் சலித்துப் போன கதைகள் தான். ஆனாலும் எங்களில் சிலருக்கு தற்போது புதிதாக அச்சம். மகிந்த ராஜபக்ச அன்கோ தற்போது வெற்றி அணியாக உள்ளதால் உண்மையில் தோற்றுவிடுவோமோ என்ற சந்தேகமே அது.

விடுதலைப்புலிகளின் வளர்ச்சி மற்றும் அதன் பரிணாமம் என்பவை பற்றி கூர்ந்து அவதானிப்பவர்கள் இவ்வச்சம் பற்றி அலட்டிக் கொள்ளப்போவதில்லை. இந்திய அமைதிப்படை இலங்கை இராணுவமென மாறி மாறி நடந்த யுத்தங்கள், எதனையும் எதிர்கொள்ளும் மனோபலத்தை புலிகளுக்கு கடந்த காலங்களில் தொடர்ந்தும் வளர்த்தே வந்திருந்தது. கெரில்லாப் போராட்ட வரலாறு பின்னர் மரபு வழிப்போராக அவ்வகையிலேயே பரிமாணம் பெற்றிருந்தது.

உண்மையில் வன்னியில் என்ன தான் நடக்கின்றது. புலிகள் என்னதான் செய்து கொன்டிருக்கிறார்கள். புலிகளைப் பொறுத்த வரையினில் போராட்ட வரலாற்றினில் இதுவோர் மோசமான நெருக்கடியான காலம்மட்டுமே. அரசும், இராணுவத் தளபதிகளும் சொல்லிக் கொண்டிருப்பது போல் இது முடிவு காலமல்ல. இந்த நெருக்கடி மிக்க மோசமான காலப்பகுதியை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றிக்கொள்வது என்பதே தற்போதைய அவர்களது முக்கிய பிரச்சினை.

வன்னிக்கள முனையினில் வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு எந்த விலையைக் கொடுக்கவும் எந்த விதமான வழிவகைகளையும் கையாளவும் படைத்தலைமை தயாராவே உள்ளது. சிலவேளைகளில் அவ்வழிவகைகள் மிகமோசமானதாகவும் இருக்கலாம். இவ்வாண்டின் முற்பகுதிகளில் விடுதலைப்புலிகள் அரச படைகள் மீது இரசாயன ஆயுதங்களால் தாக்க திட்டமிட்டிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. அத்துடன் ஒரு சில இடங்களில் அவ்வாறு தயார் நிலையில் வைக்கப்பட்ட இரசாயன ஆயுதங்களை கைப்பற்றியிருப்பதாகவும் கூறியது. அரசின் ஊதுகுழல் ஊடகங்களை இச்செய்திகளை வேகமாக பிரச்சாரம் செய்தன. ஊடக தகவல்கள் மைய தகவல்களையே ஏனைய ஊடகங்களும் விழுங்கி மீள வாந்தியெடுத்தன.

ஆனால் படைத்தரப்பு இரசாயன ஆயுதங்களை புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடு அதுவென பலரும் நம்பியிருக்கவில்லை. புலிகள், முன்னணி தளபதிகள் எண்மர் உள்ளிட்ட நானூறு போராளிகளை இதற்குப்பலி கொடுக்க வேண்டியவர்களானார்கள். அந்த இழப்பின் வலி புலிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

மீண்டும் சூனியப் பிரதேசத்தினில் மக்களைப் புலிகள் யுத்த கேடயங்களாகப் பயன்படுத்துவதாக அண்மைக்காலமாக மற்றுமொரு குற்றச்சாட்டினை அரசு அறிவித்திருந்தது. ஊடகங்களும் பலவும் அதற்கு ஒத்து குழல் ஊதின. விடுதலைப்புலிகள் மக்களை விடுவிக்க வேண்டுமெனவும் அவை தொடர்ந்து வலியுறுத்தின.

ஆனால் மீண்டும் நடந்தது வேறு‐ சூனியப்பிரதேசத்தில் உள்ள மக்களை விடுவிக்கும் அரசின் இராணுவ நடவடிக்கைக்கு அதே மக்களை படையினர் கேடயமாகப் பயன்படுத்தினர். கடந்த ஏப்ரல் 21 முதல் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியினிலிருந்து வெளியேறிய மக்களை சில தினங்களாக படையினர் உள்ளே வர அனுமதித்திருக்கவில்லை. இந்நிலையில் புலிகள் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் இடையில் அகப்பட்டிருந்தனர். அவ்வாறு அகப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை கேடயமாக்கியே படைநகர்வை சூனியப்பிரதேசம் நோக்கி படைத்தரப்பு அண்மையில் மேற்கொண்டிருந்தது சொந்த மக்கள் மீது தாக்குதலை நடத்தியே படையினரது முன்னகர்வை தடுத்து நிறுத்த வேண்டிய நெருக்கடியான சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். எனினும் அவ்வாறான தாக்குதல்களை புலிகள் தலைமை அப்போது தவிர்க்க உத்தரவிட்டிருந்ததாக தெரியவருகின்;றது.

ஆனாலும் இலங்கை அரசினால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பொது மக்களது எண்ணிக்கை கேள்விக்குரியதானவே உள்ளது சூனியப்பிரதேசத்தினில் சுமார் 70 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் உள்ளதாகவே அரசு கூறிவந்திருந்தது. ஆனால் அரசின் ஊடக தகவல் மையம் வெளியிட்ட இறுதி புள்ளிவிபரத்தினில் ஒரு இலட்சத்து 78 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி தம்மிடம் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலதிகமாக வந்திருந்த பொதுமக்கள் அண்மைய ஓரிரு மாதங்களுள் பிறந்திருந்தவர்களோ தெரியவில்லை.

ஆயினும் அரசு வன்னி சூனியப்பகுதியிலான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி என்பது எவ்வாறான வரையறையினுள் உள்ளடங்கியுள்ளதென்பது பற்றி கூறியிருக்கவில்லை. புலிகளுக்கும் அவ்வாறே உள்ள போதும் அவர்களுக்கு தேர்தல்கள் தொடர்பிலான கால எல்லையெதுவும் இல்லையென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எவ்வகையிலும் விடுதலைப்புலிகளது பெரும்பாலான படைப்பிரிவுகள் சொல்லிக் கொள்ளத்தக்க அளவில் தொடர்ந்தும் செயற்படுநிலையிலேயே உள்ளதாக அங்கிருந்து வந்த பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகின்றது. மிகப்பெரிய எண்ணிக்கையளவில் தமது ஆளணியை தொடர்ந்தும் புலிகள் பேணிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களால் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் இணைக்கப்பட்டவர்களது எண்ணிக்கையும் இதனுள் உள்ளடங்கியே உள்ளது ‐ கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் புலிகள் ஆயுத தளபாடங்களை போதிய அளவினில் கையிருப்பினில் பேணுவர்களெனவே நம்பப் படுகின்றது. குறிப்பாக புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பகுதிகளில் சரத்பொன்சேகா அன்கோ வழங்கியவையும் உள்ளடங்கியே உள்ளது.

புலிகளது வீழ்ச்சி அல்லது முடிவு என்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அண்டிய காலப் பகுதிகளில் சில வேளைகளில் சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் இன்று சர்வதேசமெங்கும் ஆழக்காலூன்றி புலிகளது வலைப்பின்னல் விரிவடைந்து விட்டது. தெற்காசிய நாடொன்றிலிருந்து தெற்கை நாள்தோறும் ஆட்டிப்படைக்கும் வலுவுடனேயே உள்ளோம். தேவையாயின் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தூதுவராலயமூடாகவும் புலிகளைத் தேடட்டும் என்கின்றார் புலிகளது தீவிர ஆதரவாளரொருவர். உண்மையும் அதுவாகவே இருக்கின்றது. அண்மைய காலங்;களில் ஐரோப்பிய மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்;தே கொழும்பிலான தாக்குதல்கள் பல திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளமை படைத்தரப்பின் புலனாய்வுத்தரப்பினை அதிர்ச்;சிக்குள்ளாக்கியிருக�
��கின்றது.

மறுபுறத்தே நீண்ட நாட்களுக்கு முன்பதாகவே தெற்கில் ஆழ ஊடுருவிநிலை கொண்டுள்ள விடுதலைப் புலிகளது தாக்குதல் பிரிவுகள் தொடர்பிலும் அரச தலைமை அச்சத்துடனேயே உள்ளது. புலிகளது புலனாய்வுப் பிரிவின் தென்பகுதிக்கான தளபதியாக இருந்த கேணல் சாள்ஸ் மரணம், புலிகளைப் பொறுத்தவரை சொல்லிக்கொள்ளத்தக்க இழப்பே. சமாதான காலத்தில் கொழும்பு அல்லது அதனையண்டிய பகுதியொன்றினில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல் போன முக்கிய பிரமுகர் நியூட்டனின் பிரிவும் அவ்வகையிலேயே இருந்தது. இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக கொழும்பு உட்பட்ட தென்பகுதிகளிலிருந்து செயற்பட்ட புலிகளது முக்கிய தாக்குதலாளிகள் காணாமல் போகச்செய்யப்பட்டனர். இதனால் பெரும் நெருக்குவாரங்களை அப்போது புலிகள் எதிர் கொண்டபோதும் ஏற்கெனவே பேணப்பட்ட களஞ்சிய கையிருப்புக்களைக் கொண்டு மேலும் புதிய பல அணிகள் பயிற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ புலனாய்வுப்பிரிவு நம்புகினறது..

இதனாலேயே தெற்கின் நினைப்பிற்கு மாறாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள அப் புதியவணிகள் எந்நேரமும் எதனையும் செய்து முடிக்கக் கூடிய வலுவுடனேயே இருப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவு அரச தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வகையிலேயே முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான கேணல் ஜெயம் நூறுக்கும் அதிகமான போராளிகளுடன் தெற்கு நோக்கிப் பயணித்ததாக செய்திகள் வெளிவந்திருந்தன.

முற்றுமுழுதாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அளம்பில் கடற்பரப்பினில் இடம்பெற்ற மோதல்களும் அந்தவகையிலேயே நோக்கப்படுகின்றது. தெற்கு நோக்கி நகர முற்பட்ட படகுகளே மோதலில் சிக்கியிருந்தன. எனினும் அப்படகுகளில் சென்றவர்கள் எவரும் முல்லைத்தீவு திரும்பியிருந்ததாக தகவலில்லை. அரசு தெற்கில் தொடர்ச்சியாக இவ்வகையிலேயே தேடுதல்களை நடாத்துகின்றது.

அதே போன்று தான் அண்மையில் வன்னி முகாங்களில் தங்கியிருந்து இளைஞர்கள் சிலர் கும்பல் கும்பலாக காணாமற்போன சம்பவமும் அமைந்துள்ளது. படைத்தரப்பை இச்சம்பவம் பெரிதும் அச்சப்படுத்தியேயுள்ளது. அண்மைக் காலப்பகுதிகளில் மக்களோடு மக்களாக புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்திருந்த இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து தப்பியோடியுள்ளனர். வடகிழக்கின் எல்லைப்புறங்களிலும், தெற்கிலும் இவ்வகையில் நீண்ட நாட்களாக நிலைகொள்ள வைக்கப்பட்டிருக்கும், உறை நிலையிலுள்ள தாக்குதல் அணிகள் எப்போதும் செயற்படலாமென அரசு நம்புகின்னறது. எனினும் அவர்களது இலக்கு அரச படைகள் என்பதற்கப்பால் பழிக்குப்பழியென்ற வகையில் எல்லையற்ற வகையிலேயே இருக்கும். சிங்கள தேசமும் யுத்தத்தின் மற்றைய பக்கத்தை அப்போது உணர்ந்து கொள்ளும். இதையடுத்தாவது சர்வதேச தலையீடு தீர்வொன்றினை பெற்றுத்தருமென்பதே புலிகளின் நம்பிக்கையாக இருக்கின்றது. இவ்வாறில்லாமல்; கட்டுப்பாடற்ற இராணுவ நடவடிக்கையொன்றின் மூலம் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டு போர் வெற்றியை அரசு பெறமுற்படுமானால் அதற்கான விலை மிகப் பெரியதாகவே இருக்கும்.

அவ்வாறானதோர் சூழல் ஏற்படுமானால் தெற்கு யுத்தத்தின் இறுதி வலியை தானும் உணர வேண்டியதோர் நிலைக்கு தள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சூனியப்பிரதேசம் மீதான கட்டவிழ்த்து விடப்படும் இறுதிப்போர் நடவடிக்கைகள், புலிகளின் கைகளை கட்டிப்போட தொடர்ந்தும் சர்வதேசத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப் போவதில்லை. புலிகள் தமது போராட்ட வரலாற்றின் உச்சக்கட்ட முறியடிப்பு நடவடிக்கைக்கு அப்போது தள்ளப்பட்டிருப்பர்.

உண்மையில் வன்னிப்பேரின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப்போவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலே. மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏறப்போகும் தரப்பு எது என்றே அரசும் சரி புலிகளும் சரி எதிர்பார்த்திருக்கின்றனர். கள முனைகளில் எந்தத் தரப்பின் கைகள் ஓங்கும் என்பதும் அதைப் பொறுத்தே உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் விடுதலைப்புலிகளை குறிப்பிட்டதொரு சிறுபகுதியினுள் மடக்குவதில் அரசுபடைகள் வெற்றி கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் போரிடும் வலுகுறையாத நிலையில் தனது பெருமளவிலான போராளிகள் மற்றும் யுத்த தளபாடங்கள் சகிதமே புலிகள் பின்வாங்கியிருக்கின்றார்கள�
�. எனினும் பிற்தள எற்படுகள் போதியளவில் இன்மையால் புலிகளால் உடனடியாக பெருமெடுப்பிலான படைநடைவடிக்கைகளை உடனடியாக செய்வதென்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.

இந்தியத் தேர்தல் முடிவுகளின் பின்னரான அடுத்து வரும் நாட்கள் எப்படியிருப்பினும், அரசு தனது இறுதித்தாக்குதலை சூனியப் பிரதேசம் மீது நடத்;தியே தீருமென்பதில் மாற்றமில்லை. ஆனால் அங்கு புலிகளுடனேயே தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்பினில் என்ன நடக்குமென்பதே அனைவருக்கும் உள்ள அச்சமாகும். ஏற்கனவே உணவுத்தடை மூலமும் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள் மூலமும் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இச் சந்தர்ப்பத்தினில் கூட சர்வதேசம் தமது மக்களுக்கு ஏதாவதொரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற எஞ்சிய நமபிக்கையுடனேயே புலிகள் அடுத்து வரும் நாட்களையும் பார்த்திருக்கின்றனர்.

வன்னியில் இருந்து பரமதயாளன்

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails