Saturday, May 16, 2009

சிங்களவர்களின் கொட்டத்தை முறியடிக்க வேண்டும்-மலையகத்தில் இருந்து தமிழன்

நமக்காக நாம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும்: மலையகத்திலிருந்து ஒரு குரல்
பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்களுக்கு விடிவு ஒன்று கிடைக்கும், உலக நாடுகளும், இந்தியாவும் எம் மக்களுக்கு துணை புரியும் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் வெறும் அறிக்கைகளை மாத்திரமே விடுத்து, எங்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றி, இன்றுவரையில் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். 


இந்தியாவில் காங்கிரஸ் அரசாங்கம், எமது மக்களை கொன்று குவிப்பதற்கான சகல ஆயுதங்களையும் வழங்கி வருவதாக அறிந்த போது, இந்திய வம்சாவளி மக்களாகிய எங்களின் இரத்தம் கொதித்தது.

ஆனால், அந்த அரசாங்கத்தின் ஆயுள் காலம் மிகவும் குறுகியது என கருதி நாங்கள், இந்திய லோக்சபா தேர்தலின் முடிவுகளை எதிர்பார்த்திருந்தோம். ஆட்சி மாற்றமாவது, இலங்கையின் ஆட்கொல்லி அரசாங்கத்தின் கழுத்தைப் பிடித்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்பினோம். மலையக மக்கள் என்ற வகையில் நாங்கள் பல்வேறு வழிகளில் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த நம்பிக்கையிலும் தற்போது மண் விழுந்ததைப் போல் ஆகிவிட்டது. 

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் விடுதலைப் புலிகளின் விடுதலைப்போராட்டத்திற்கு தலைவணங்கி வருகிறோம். 

அங்கு எமது சொந்தத்தின் காயத்தில் இரத்தம் வழிகையில், எங்களின் கண்ணீருடன் சேர்ந்து அந்த இரத்தம் வழிவதை நாங்கள் எப்படி, எங்கள் சொந்தங்களுக்கு சொல்லும் வழிகள் கூட தெரியாத ஜனமாய் நாங்கள் இருந்திருக்கிறோம்.

தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவாக எங்கெங்கோ உலக நாடுகளில் எல்லாம் போராட்டங்கள் செய்து கொண்டிருக்கும் போது, நாங்கள் மட்டும் எங்கள் வீடுகளுக்குள்ளே கண்ணீர் வடித்து கதறி அழுதிருக்கிறோம்.

ஆனால் அந்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்காதமைக்கு காரணங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது, சமூகங்களுக்கு விளங்கியிருக்கும் என்பதால் தவிர்ந்து போகிறது. 

எங்களின் மக்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடி வருகின்றமையறிந்து, அவர்களுக்கு மலையக சமுகம் எத்தகைய உதவிகளை செய்திருக்கிறது என அவர்கள் அறிவார்கள்.

ஆனாலும், தற்போது நாங்கள் அவர்களின் நிலமையறியாது, எங்களின் பிள்ளைகளின் நிலைமைகளை அறியாது, என்ன நடக்கிறதோ, என்பதறியாது தவித்து போய் இருக்கிறோம்.

எங்கள் ஊரின் பெண்கள் மலைகளில் ஏறி தேயிலைப் பறிப்பதைவிட, வடக்கு கதைகளை கதைப்பது தான் அதிகமாக இருக்கிறது. இந்த விடயத்தில் மட்டும், அந்தஸ்து பேதம் இன்று மலையத்தின் ஆங்காங்கே தமிழர்கள் கூடி, கதைத்தும் கண்ணீர் வடித்தும் கொண்டுதான் இருக்கிறார்கள், 

ஐயா, நாங்கள் எழுதுவது, சர்வதேச சமுகத்திற்காகவோ, வேறு யாருக்காவோ இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத்தான். அவர் தமிழுக்கு தலைவராகவே நாங்கள் கருதுகிறோம்.

அவர் தற்போது என்ன செய்கிறார். இதனை அறிந்துக் கொள்ளும் வழிமுறைகள் எதுவும், எங்கள் மலையகத்தில் இல்லை. நாங்கள் எவ்வாறு அவற்றை அறிந்து கொள்வோம்?

நாங்கள் நேரடியாக அவர்களின் நலன் குறித்தோ, நிலைமை குறித்தோ விசாரிக்க தெரியாது இருக்கிறோம், அதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் பித்துப்பிடித்தாற்போல் சுற்றித் திரிகிறோம்.

விடுதலைப் புலிகளின் பல்வேறு உரைகளில் நாங்கள் கேட்டிருக்கிறோம், தமிழ் சமூககங்களின் ஆதரவும் நம்பிக்கையும் தான், தங்களை வளர்த்ததாகவும், தொடர்ந்தும் போராடும் தன்மையை வழங்குவதாகவும் அவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிடுமோ என்ற பயம் அதிகமாக இருக்கிறது.

ஆரம்பகாலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்தது. காரணம் கடவுளை கண்டதாக பலர் கூறி வந்தனர், செய்யுள் இலக்கியம், பாடல் என பல்வேறுவற்றை இயற்றினர்.

ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை தற்போது அரிதாகிவிட்டது, காரணம் தற்போது கடவுளை காண்பவர்கள் யாரும் இல்லை. கடவுள் குறித்து ஆரம்ப காலம் போல, எதுவும் புதிதாக வெளியிடுவதில்லை. கடவுள் குறித்த தகவல் எதுவும் இல்லை. 

அதுபோலதான் இதுவும், ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் சகல செயற்பாடுகளும் எங்களுக்கு தெரியவந்தது.. எங்களுக்கு மட்டும் இல்லை உலகின் ஏராளமானவர்களுக்கும்… 
அதனால் எங்களின் நம்பிக்கை உச்சத்தை எட்டியிருந்தது. ஆனால் தற்போது அந்த நம்பிக்கை எங்களை அறியாமலேயே நலிவடைந்து போகிறது. காரணம் நீங்கள் அறிவீர்கள்.

ஆகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் தமது பலத்துடன் இருக்கிறது என்பதை நிரூபிக்க ஏதேனும் செய்யுங்கள், எங்கள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுங்கள். 
நீங்கள் முழுமையான பலத்துடன் இருப்பீர்கள் என்ற எங்களின் நம்பிக்கையை ஏமாற்றிவிடாதீர்கள், நாங்கள் தவித்து கிடக்கிறோம்.

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், நடப்பு அரசாங்கம் தோற்று எங்கள் பொது மக்களுக்கு விடிவு கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். மலையத்தில் நடந்த தேர்தல்களின் முடிவுகளை நீங்கள் அவதானித்தால் நாங்கள் முயற்சி எடுத்தமை புரியும் 

ஆனால் இனத் துவேசமும் யுத்த வெறியும் கொண்ட சிங்கள அரக்கர்கள் , அரக்கர்களையே மீண்டும் இலங்கைக்குள் வரவழைத்துவிட்டனர். இந்திய தேர்தலும் அவ்வாறே முடிவினை தந்துவிட்டது. கடவுள் கூட எமது தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகிறான். தமிழ் இனத்தை அழிக்க கடவுளும் கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டான்.

எத்தனை உயிர்கள் அழிந்தும், இன்னும் அவன் கொலைகாரனாக செயற்படுகிறானே தவிர, காப்பாற்றுபவனாக செயற்படவில்லை. அதனால் தான் அவன் கோவில்களையும் இடித்து ஒழிக்க ஏற்பாடு நடக்கின்றன. 

அனைத்து முடிவுகளும் எங்களுக்கு எதிராகவே இருக்கிறது. நமக்காக நாம் என்ற பேராட்டத்தை ஆரம்பித்து, இழந்தவற்றை மீட்க வேண்டும், சாட்சிக் காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் கதையை முடிக்கலாம்.

மற்றவர்களிடம் கையேந்துவதைவிட, இதுவரையில் நாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தை வெற்றி பெற, நாம் மீண்டும் போரிடக்கூடிய வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து, ஆராய்வோம்.

இத்தனை உயிர்களின் அழிவுக்கு பின்னர் இன்னும் மௌனம் ஏன்? இதுவரை காலமும் நம் போராட்டத்துக்கு உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் ஆத்ம சாந்திக்காகவேனும், மீண்டும் போராட்டத்தை மேலெடுத்து, தலை தூக்கி ஆடுகின்ற சிங்களவர்களின் கொட்டத்தை முறியடிக்க வேண்டும். 

மலையகத்தில் இருந்து தமிழன் 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails