Wednesday, May 20, 2009

பிரபாகரனும், பொட்டு அம்மான் கஞ்சிக்குடி காது என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று விட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரபாகரன் மரணம் மர்மம் நீடிக்கிறது; உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு
 
 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டு கொன்று விட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது. நேற்று முன்தினமே அறிவிப்பு வந்தாலும் நேற்று மதியம் வரை அவரது உடலை காட்டவில்லை. அதிபர் ராஜபக்சே நேற்று காலை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அப்போதும் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.
இப்படி ராணுவம் முன்னுக்கு பின் முரணாக கூறி தகவல்கள் முதலில் சந்தேகத்தை ஏற்படுத்தின. இப்போது அவர்கள் காட்டியுள்ள உடலும் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விடுதலைப்புலி ஆதரவு இணைய தளங்கள் கூறுகின்றன. இறந்த போன யாருடைய உடலையோ பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரபாகரன் மாதிரி வடிவமைத்து அதை காட்டி வருவதாக அதில் கூறி உள்ளனர்.
பிரபாகரன் உடலை டி.என்.ஏ. சோதனை செய்து பார்த்ததில் இது அவரது உடல் தான் என்று உறுதியாகி இருப்பதாக சிங்கள ராணுவம் நேற்றே கூறியது. ஆனால் டி.என்.ஏ. சோதனையை மின்னல் வேகத்தில் நடத்த முடியாது. பிரபாகரனின் ரத்த மாதிரி ஏற்கனவே ராணுவத்திடம் இருந்தால் தான் இந்த சோதனையையே செய்ய முடியும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் கூறி இருக்கிறார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails