Monday, May 25, 2009

பெண்களுக்கு மட்டும்!!!:நீங்கள் மாமியாராகவோ,அல்லது மருமகளாகவோ இருந்தால் கண்டிப்பாக இது படியுங்கள்

 
ஹைய்யா..!
* மருமகளை தன்னுடைய மகளை போல் பாவித்தால் கண்டிப்பாக பிரச்சினையே ஏற்படாது. மருமகளுக்கு புரியாததை புரியும்படி, மெதுவாக எடுத்து சொல்லி புரியவைப்பது மாமியாரின் கடமை. மருமகளை குறை சொல்லிக் கொண்டிருந்தால் சிக்கல்கள் அதி கரிக்குமே தவிர, குறையாது. மருமகளின் மகிழ்ச்சியில்தான் உங்கள் மகனின் மகிழ்ச்சியும் உள்ளது. மொத்தத்தில் உங்களின் குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது.

* கணவரின் பாராட்டை விட மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பாராட்டுதலையே மருமகள் மிகவும் விரும்புவாள். அப்படி பாராட்டும் போது உச்சி குளிர்ந்து போவாள். பிறந்த வீட்டிலும், தன்னுடைய தோழிகளிடமும் இதை பெருமையாக சொல்லி மகிழ்வாள். அதனால் மருமகளிடம் நட்பு பாராட்டி, பின்னர் குறைகளை சொன்னால் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்வாள்.

* மாமியார் மற்றும் மருமகள் இருவருமே உங்கள் வீட்டின் அஸ்திவாரம் நீங்கள்தான் என் பதை உணருங்கள். உங்களுக்குள் தோன்றும் நியாயமான கருத்துகளை அனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற் காக வாக்குவாதம் செய்வதும் தவறு. மாமியாரின் நியாயமான கருத்தை மருமகள் நிராகரிப்பதும், மரு மகளின் முடிவு சரி என தெரிந்தும் வேண்டுமன்றே அதற்கு முட்டுக்கட்டை போடும் மாமியாரும் பிரச்சி னைகளுக்கு இன்னும் விளக்கேற்றி வைக்கிறார் கள்.

* உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை வெளி ஆட் களிடம் சொல்ல வேண்டாம். அதனால் எந்த நன்மையும் உண்டாகாது. இதனால் சிக்கல்கள் இன்னும் அதிகரிக்கும். அதனால் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை பெரிதாக்காமல் நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குணத்துடன் இருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல பேச்சுவார்த்தை, நயமான அணுகுமுறை பிரச்சினைகளை குறைக்கவே செய்யும்.

* புரிந்து கொள்ளுதல் என்பதே அன்பின் வெளிப்பாடுதான். அன்பு இல்லை என்றால் புரிந்து கொள்ளவும் முடியாது. குடும்பம் என ஆகிவிட்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பினை முழுமையாக வெளிக்காட்ட வேண்டும். உங்களுக்கு வேண் டியவரை நீங்கள் கவர வேண்டும் என்றால் புரிந்து கொள்வது அவசியம். இதை மாமியார், மருமகள் இருவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


* மருமகள்களும், தங்களுடைய மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக நினைத்துக் கொண்டாட வேண்டும். மைத்துனர், நாத்தனார் ஆகிய குடும்பத்து உறுப்பினர்களை, பிறந்த வீட்டு சொந்தம் போல் நினைத்தால் உங்கள் வாழ்க்கையும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். பூமியில் ஒருவர் பிறக்கும்போதே பல உறவுகளைக் கொண்டவராகத் தான் பிறக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* அன்பைப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அளவிலா ஆனந்தம் அடைய முடியும். மாமியார், மருமகள் இருவரும் அளவில்லா அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதே குடும்பத்திற்கு நல்லது. தனக்கு என்ன பிடிக்கிறதோ அதைத் தான் மருமகளும் செய்ய வேண்டும் என மாமியார் அடம் பிடிப்பது கூடாது. தன்னுடைய மருமகளை நல்ல தோழி யாகவும், மகளாகவும் நினைத்துக் கொண்டாலே போதும்.


* எப்பொழுதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்போது தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை மாமியார், மருமகள் இருவரும் புரிந்து கொள்ளுங்கள். மாமியார், மருமகள் இருவரும் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் வீட்டில் அமைதியும், ஆனந்தமும் அதிகரிக்கும். இதனால் ஆண்களுக்கு ஆன்ம பலமும், ஆயுள் பலமும், வருமானமும் அதிகரிக்கும்.

* மருமகள்கள் தங்களுடைய அன்பின் அருமையை புகுந்த வீட்டு உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும்வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதே போல் புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமையை பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. புகுந்த வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சிறிய தவறு செய்து விட்டாலும், பெரிது படுத்தாமல் அதை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும்.

* மருமகள்கள் புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரி யாதையையும், அன்பையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாமல் செய்ய வேண் டும். பிறந்த வீட்டில் இருந்ததைப் போன்று அன்பு, கடமை, உரிமை மற்றும் பொறுமையை கடைபிடிப்பது மருமகள்களுக்கு மிகவும் அவசியம். மருமகள்களுக்கு பிறந்த வீட்டை விட புகுந்த வீடே மேன்மையானது.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails