லண்டனில் கிறிஸ்தவ ஆலய உச்சியில் ஏறி போராட்டம் - இலங்கை தமிழர்கள் கைது |
இலங்கை தமிழர் படுகொலை விவகாரத்தில் தலையிடக்கோரி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள தமிழர்கள், கடந்த 5 வாரங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் ரத்த ஆறு ஓடுவதாக ஐ.நா.சபை எச்சரித்ததை தொடர்ந்து இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது.
நேற்று, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கிறிஸ்தவ ஆலயத்தின் உச்சி மீது ஏறி தங்கிய இலங்கை தமிழர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
லண்டன் பாராளுமன்ற சதுக்க முற்றுகையிலும் இலங்கை தமிழர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இன்று நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்திலும் இலங்கை தமிழர் பிரச்சினை விவாதிக்கப்படவ்வுள்ளது |
No comments:
Post a Comment