Monday, May 18, 2009

பிரபாகரன் சுட்டுக் கொலை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்

பிரபாகரன் சுட்டுக் கொலை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்      
 
கொழும்பு:விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் இன்று காலை போர்ப்பகுதியில் இருந்து தப்பிச்செல்லும் பொழுது இலங்கை ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகளின் வசம் உள்ள எஞ்சிய பகுதிகளை மீட்பதற்காக கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர்ப்பகுதியிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் சில வாகனங்களில் விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்கள் தப்பி செல்லும்பொழுது இலங்கை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும். இதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டுஅம்மன், கடற்புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இவர்களது உடலை அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. இத்தகவலை இலங்கை ராணுவப் பேச்சாளர் தெரிவித்ததாக கூறி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக இலங்கை ராணுவமோ, இலங்கை அரசோ உறுதிப்படுத்தவில்லை.இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் இறந்தது பொட்டு அம்மன் மற்றும் சூசை என்றும் பிரபாகரன் இறந்தார் என்பதை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்புதுறை செய்தி படிக்க: http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9695&Itemid=44

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails