Friday, May 22, 2009

பிரபாகரன் மனைவி, மகள் மரணம் அடையவில்லை; பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: இலங்கை ராணுவம் அறிவிப்பு

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, 2-வது மகன் பாலச்சந்திரன் ஆகிய மூவரும் இங்கிலாந்தில் பாதுகாப்புடன் உள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரப் பூர்வமற்ற ஒரு தகவல் கடந்த புதன்கிழமை வெளியானது.

பிரபாகரன் உடல் கிடந்த நந்திக்கடல் கழிமுக பகுதியில் மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய 3 பேரின் உடல்களை மீட்டதாக ராணுவத்தின் 56-வது படையணி கூறியது. பிரபாகரன் உடல் கிடந்த இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது சிங்கள ராணுவத்தின் ஏமாற்று வேலை என்று உடனடியாக மறுப்பு தெரி விக்கப்பட்டது.

பிரபாகரன் உடல் கிடந்ததாக கூறப்படும் நந்திக்கடல் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் திரண்டிருந்தனர். அவர்களுக்கு எப்படி மதிவ தனி, துவாரகா, பாலச்சந்திரன் உடல்கள் அன்றைய தினம் கிடைக்காமல் போனது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து பிரபாகரன் மனைவி குறித்து வெளியிடப்பட்ட தகவல் தவறானது என்று சிங்கள ராணுவம் ஒத்துக்கொண்டது.

இது தொடர்பாக சிங்கள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகே டியர் உதய நாணயக்காரா கொழும்பில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் மரணம் அடைந்து விட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர்களது உடல்கள் எதையும் ராணுவம் மீட்கவில்லை.

ராணுவத்திடம் 4 ஆயிரம் விடுதலைப்புலிகள் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நடேசன், புலித்தேவன் இருவரும் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த போது சுட்டுக் கொல்லப்படவில்லை. ராணுவத்துடன் சண்டையிட்ட அவர்கள் இறந்தனர்.

கடைசி நாள் போரில் ராணுவமும் பலத்த உயிரிழப்பை சந்தித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எத்தனை ஆயிரம் சிங்கள வீரர்கள் பலியானார்கள் என்று கேட்டதற்கு உதய நாணயகாரா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

சிங்கள ராணுவத்துக்கு 40 ஆயிரம் வீரர்கள் தேவை என்று அரசு சார்பில் கடந்த 2 நாட்களாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது, முல்லைத்தீவு சண்டையில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை சிங்கள ராணுவம் இழந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

முல்லைத்தீவு நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம்: சிங்கள ராணுவம் சொல்கிறது

இலங்கை முல்லைத்தீவில் உள்ள நந்திக் கடல் பகுதியில் நடந்த சண்டையில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாக ராணுவம் அறிவித்தது.

பிரபாகரன் உடலை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு துரோகம் செய்து அமைச்சர் பதவி பெற்றுள்ள கருணாவை அழைத்து வந்து அடையாளம் காண வைத்தனர்.

கருணாவும் அந்த உடலை பார்த்து விட்டு இது பிரபாகரன் உடல்தான் என்றார்.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் உறுதியுடன் தகவல் வெளியிட்டனர். பிரபாகரன் எப்படி தப்பிச்சென்றார் என்ற முழு விபரமும் நேற்று வெளியானது. இதனால் பிரபாகரன் தொடர்பாக மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் பிரபாகரன் உடலை எரித்து விட்டோம் என்று சிங்கள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் உதயநாணய காரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரபாகரன் உடலை ராணுவம் கைப்பற்றியது. அந்த உடம்பில் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் எடுத்துள்ளோம். இது பிரபாகரன் உடல்தான் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனி பிரபாகரன் உடல் தொடர்பாக எந்த டி.என்.ஏ. சோதனையும் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பிரபாகரன் உடலை எரித்துவிட்டோம். அவரது உடல் மீட்கப்பட்ட நந்திக்கடல் பகுதியிலேயே இந்த தகனம் புதன்கிழமை நடந்தது.

பிரபாகரன் உடலுடன் அவரது சகாக்களின் உடல்களும் முழுமையாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் பிரபாகரனும் அவரது சகாக்களும் தப்பிச் சென்று விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

பிரபாகரன் உடலை எங்கள் டி.வி.குழுவினர் படம் பிடித்துள்ளனர். கருணாவும், தயா மாஸ்டரும் உறுதி செய்துள்ளனர். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

இவ்வாறு பிரிகேடியர் உதயநாணய காரா கூறினார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails