Wednesday, May 13, 2009

வாக்குக் கணிப்பு: தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 28 இடங்கள்

வாக்குக் கணிப்பு: தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு 28 இடங்கள்

aiadmkதேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏறக்குறைய சம அளவில் தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன.

இருப்பினும் எந்த ஓர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.

மக்களவைக்கு 5வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்குக் கணிப்பை வெளியிட்டன.

டைம்ஸ் நவ்: காங்கிரஸ்-154, பாஜக 142, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-209.

சிஎன்என்-ஐபிஎன்: காங்கிரஸ் 145-160, பாஜக 135-150, 3-வது அணி 110-130, இதர கட்சிகள் 70-100.

ஸ்டார் நியூஸ்: காங்கிரஸ்-199, பாஜக 196, 3-வது அணி 100, இதர கட்சிகள்-36.

ஹெட்லைன்ஸ் டுடே: காங்கிரஸ்-191, பாஜக 180, இடதுசாரிகள்-38, இதர கட்சிகள்-134.

இண்டியா டிவி: காங்கிரஸ்-195, பாஜக 194, 3-வது அணி-108, இதர கட்சிகள்-46.

நியூஸ் எக்ஸ்: காங்கிரஸ்-199, பாஜக 191, 3-வது அணி-104, இதர கட்சிகள்-48.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சில மாநிலங்களுக்கான வாக்குக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 29ஐ கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. லாலு-பாஸ்வான் கூட்டணிக்கு 6-ம், காங்கிரஸுக்கும் 3 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக 23, அதன் கூட்டணிக் கட்சிகள் 5, திமுக 7, காங்கிரஸ் 4.

ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாகக் தொடங்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவியின் கட்சிக்கு 4 இடங்களும், காங்கிரஸுக்கு 15-ம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மற்றும் தெலுங்கு தேச கூட்டணிக்கு 20 தொகுதிகள்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 23, காங்கிரஸுக்கு 6.

அசாமில் பாஜக கூட்டணிக்கு 7, காங்கிரஸுக்கு 5.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பாஜகவுக்கு 19, காங்கிரஸுக்கு 7.

ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு 13, பாஜகவுக்கு 10, சுயேச்சைகள் 2.

கேரளத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கு 15, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 5.

கர்நாடகத்தில் பாஜகவுக்கு 16, காங்கிரஸுக்கு 9, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 11, பாஜக 13, சிவசேனை 12.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கு 17, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 24.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 27, சமாஜவாதி கட்சிக்கு 23, பாஜக 14, காங்கிரஸ் 13.

நன்றி : தினமணி.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails