நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்டு இருந்த பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற கட்டுரையை கண்ட உடனே சிங்களவனுக்கும்,சிங்கள அடிவருடிகளுக்கும் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்திருக்கிறது போலும்.அதனால் தனோ என்னவோ நக்கீரன் பத்திரிக்கையை சகட்டுமேனிக்கு திட்டி தள்ளிவிட்டார்கள்.
ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று நாம் அறிந்து கொள்ளுவது முக்கியமல்லவா?
முதலில் நக்கீரன் பத்திரிக்கையின் அட்டை படத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் உட்கார்ந்து அவர் முன்பாக உள்ள தொலைக்காட்சியில் அவரை பற்றி சிங்கள அரசாங்கள் பரப்பிவரும் பொயுரைகளை பார்ப்பதாக உள்ள படம் நக்கீரன் நேரில் சென்றுஎடுத்ததாக எங்கும் எழுதவில்லை.பத்திரிக்கைக்கு உள்ளே உள்ள கட்டுரையின் சாராம்சத்துக்கு தகுந்த மாதிரியான படத்தை பத்திரிக்கையின் முன் அட்டையாக வெளியிடுவது நக்கீரன் பத்திரிக்கையை வாசிக்கும் வாசகர்களுக்கு தெரியாத விஷயமல்ல.அதிலும் மேதகு பிரபாகரனின் படம் இதே படம் நக்கீரனில் முதல் பக்கத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ளதை அறியாத சில அடிவருடிகள் எதோ புலனாய்வு செய்து அந்த படம் தமிழ்நெட் இணையதளத்தில் வெளியானது.அதை நக்கீரன் இப்பொழுது தான் கிராபிக்ஸ் செய்து வெளியிட்டது என்று விளக்கெண்ணை தனமாக பதிவு எழுதியுள்ளார்.
நக்கீரன் பத்திரிக்கை அட்டை கிராபிக்ஸ் ஜாலம் இது மட்டும் அல்ல இன்னும் உண்டு.
No comments:
Post a Comment