பெண் எழுத்தாளர் கமலாதாஸ் மரணம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா தாஸ். ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய, மை ஸ்டோரி', சம்மர் இன் கல்கத்தா', தி டிசென்டன்ட்ஸ்' போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
குறிப்பாக, மை ஸ்டோரி' என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. மலையாள, ஆங்கில மொழிகளில் அவருக்கென ஏராளமான ரசிகர் வட்டாரம் உள்ளது. இலக்கியத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.
செக்ஸ், காதல், நம்பிக்கை துரோகம் போன்றவை குறித்து துணிச்சலாக புத்தகங்கள் எழுதியதால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். 75 வயதான அவருக்கு முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 18 ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் காலமானார்.
No comments:
Post a Comment