கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடலை அடையாளம் காண்பதற்காக இலங்கை ராணுவ முகாமிற்கு எடுத்து செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய தொலைக்காட்சியான சின்.என்.என். ஐபின் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அதே சமயம் முல்லைத்தீவு பகுதியில் 150 விடுதலைப் புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெற்று வரும் புலிகளுக்கு எதிரான போரில் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் முக்கியத்தலைவர்கள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டு இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில், இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. இறந்து கிடந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார். இதனிடையே விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் ராணுவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை முற்றிலும் வெற்றி கொண்டதாகவும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். இந்தியாவின் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளான சிஎன்என் ஐபிஎன், என்டிடிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்டவை இதே செய்தியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகின்றன. ஐபிஎன் செய்தி படிக்க http://ibnlive.in.com/news/lanka-army-claims-ltte-chief-prabhakaran-dead/92805-2.html கடைசிச் செய்தி : மேற்கண்ட இந்த தகவலை இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதயநாணயக்காரா மறுத்துள்ளார் |
Sunday, May 17, 2009
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலை?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment