பிரபாகரன் இறப்பு குறித்து புலிகள் சொல்வதை நம்பாதீர்: தா.பாண்டியன்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்பு குறித்து இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தேர்தல் முடிவு குறித்து ஆராய கோவையில் ஜூன் 6 முதல் 9 வரை கட்சியின் மாநில குழுவும், டில்லியில் ஜூலை 3 முதல் 6 வரை தேசிய குழுவும் கூடுகிறது. பொதுத்துறை, காப்பீடு கழகங்களில் 49 சதவீத பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வங்கிகளை பாதிக்கும். அமெரிக்காவில் யுத்தத்திற்கான கடன் பத்திரங்களில் இந்தியா 31,800 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் 2008க்கு பிறகு 21 ஆயிரம் கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு முதலாளித்துவ பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதை கண்டித்து பிற கட்சிகளுடன் இணைந்து பொது இயக்கங்கள் நடத்தப்படும். தமிழகத்தில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடரும். தேர்தல் கமிஷன் நடுநிலைமையுடன் செயல்பட்டாலும், கமிஷன் சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. காயம்பட்டவர்களின் கிட்னி, கல்லீரல்களை வெட்டி விற்பதாக மனித உரிமை கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்தியா தடுக்க வேண்டும்.
பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் முதலில் எங்களை தொடர்புகொண்டு கூறினார். 3 நாட்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்றும், அதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் கூறினார். அடுத்த 2 மணி நேரத்தில் விடுதலைபுலிகளின் நெட் பிரிவு பொறுப்பாளர் அறிவழகன், "பிரபாகரன் வேறு ஒரு இடத்தில் இருக்கிறார்' என்றார். இவ்விஷயத்தில் இலங்கை அரசும், புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம். இதை விட்டுவிடுவது நல்லது என்றார்.
No comments:
Post a Comment