இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
3 லட்சம் மக்கள் மிகப் பயங்கரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையின் மனித உரிமை மீறல்களை அங்கு எடுத்துக் காட்டி இலங்கையுடன் வர்த்தகம் செய்யும் Marks & Spencer, Next போன்ற நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது அல்லது இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்லும் போது ஒவ்வொருவரும் கொடுக்கும் பணம் மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்திருக்கும் அரசுக்கு செல்லத்தான் வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து சிந்தியுங்கள் எனக் கூறியுள்ளார்.
உலகத்திலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடு இலங்கை எனத் தெரிவித்த அவர் இளைஞர் ஒருவர் நிர்வானமாக இருத்தப்பட்டு அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் காட்சியை அனைவரும் சனல் 4ல் பாரத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மிக மோசமான சூழல் நிலவுகின்ற இலங்கை குறித்து உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த தடவை ஒவ்வொருவரும் செலவழிக்கும் பணம் இந்த இலங்கை அரசாங்கத்தை சென்றடைய வேண்டுமா? ஏன சிந்திக்குமாறு ஆலோசனை கூறி உள்ளார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment