கோடஞ்சேரி: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அம்மன் கோவிலில் முஸ்லிம் குழந்தைக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், கோடஞ்சேரி ஊராட்சியில், வட்டல் சர்ச் உள்ளது.
இங்கு, பல ஆண்டுகளாக, விஜயதசமி நாளில் வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு விஜயதசமி நாளன்று, சர்ச் நிர்வாகி பாதிரியார் எல்தோ தோம்ப்ரா, முன்னாள் நிர்வாகி பாதிரியார் வர்கீஸ் குடம் கீரில் ஆகியோர், குழந்தைகளுக்கு கல்விக்கான முதல் எழுத்தை நாக்கில் எழுதினர். நிகழ்ச்சியில், 143 குழந்தைகள் பங்கேற்றனர். சர்ச்சில் இந்து ஆசாரப்படி வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது.
அதேபோல், பத்தனம்திட்டா மாவட்டம், மான்னார் பகுதியில் உள்ள கார்த்தியாயினி அம்மன் கோவிலுக்கு, ஜாகீர் உசேன் மற்றும் ஷபி தம்பதியரின் நான்கு வயது மகன் அஜ்மல் முகமது வந்தான். அங்கு, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் நாயர் மடியில் அவன் அமர்ந்தான். அவனது நாக்கின் நுனியில், தங்கத்தால், அவர் "ஹரி ஸ்ரீ' என்று எழுதினார். பின், குழந்தையின் விரலை பிடித்து , அரிசியில்"ஹரி ஸ்ரீ 'என்று எழுதினார். இவ்விரு நிகழ்ச்சிகளும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தன.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment