Saturday, June 28, 2008

இன்னும் ஒரு இனிமையான பொய்?

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?




 
சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!


முன்னுரை: சமீப காலமாக தமிழ் முஸ்லீம் அறிஞர்கள், இஸ்லாமுக்காக பல கட்டுரைகளை, கேள்வி பதில் கட்டுரைகளை, இஸ்லாமை தழுவிய மாற்று மத நண்பர்களின் சாட்சிகளை பதித்துக்கொண்டு வருகிறார்கள். இதே போல கிறிஸ்தவர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, உலக அளவில் மக்கள் ஒரு மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கும், அதே போல இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக கவனித்தால், மத நம்பிக்கையிலிருந்து நாத்தீகத்திற்கும் அதிக அளவில் மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

1. பொய்யை உண்மை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள்:

மக்கள் சின்ன பொய்யை விட பெரிய பொய்யை சீக்கிரத்தில் நம்புவார்கள் என்று சொல்லுவார்கள். அது போல, நம் இஸ்லாமிய தளங்கள் ஆதாரங்கள் எதையுமே காட்டாமல், பெரிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒருசில பொய்களை கீழேயுள்ள கட்டுரைகளில் படிக்கலாம்:

A) 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்கள்:

சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினாராம். இவர் மூலமாக இதுவரை (5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்களாம். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்களாம். படிக்கவும்: 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்ககளா?

இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன், இன்று வரை பதில் இல்லை.

B) கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

கிறிஸ்தவ பாதிரிகள் ஹஜ்செய்தார்கள் என்று கட்டுரை எழுதினார்கள், அப்படியானால், ஆதாரம் எங்கே என்று கேட்டேன், இதுவரை பதில் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கை பெயரை குறிப்பிடுவார்கள்( தமிழ் நாட்டில் உள்ளவர்கள், அந்த பத்திரிக்கைகளில் இச்செய்தி உள்ளதா என்று தேடிபார்க்கமாட்டர்கள் என்று நம்பிக்கையில்), ஆனால், அந்த செய்தி வெளியான தொடுப்பை கொடுக்கமாட்டார்கள். படிக்க:
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?

C) ஜீமெயில் படத்தை திருத்தி, இது தான் ஆதாரம் என்றார்கள்:

தங்களுக்கு வாசகர்களிடமிருந்து கேள்விகள் வந்தன என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் பற்றி கட்டுரைகளை எழுதினார்கள். இவைகள் பொய் என்றுச் சொன்னோம், உடனே, தங்களுக்கு வாசகர்களிடமிருந்து மெயில் வந்ததாகச் சொல்லி, ஜீமெயில் படத்தை திருத்தி அதை ஆதாரமாக பதித்தார்கள். படிக்க: கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம்

2. இப்பொழுது இன்னொரு செய்தி, முஸ்லீம்களிடமிருந்து:

மன்னர் பஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!


இந்த செய்தியை நான் பொய் என்று திட்டவட்டமாக சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக இந்த செய்திக்கான ஆதாரத்தை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த செய்தி பல இஸ்லாமிய தமிழ் தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது.

இப்னுபஷீர், சித்தார் கோட்டை, மஸ்டோகா, ஆதிரை ஐஐசி, தமிழ் முஸ்லீம்.

இத்தாலிய பாதிரியார் இஸ்லாமை தழுவிய விதம்:

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

emphasis mine

3. இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் காட்டிய ஆதாரங்கள்:

இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரப் நியூஸ் என்ற ஆங்கில தளம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த ஆங்கில செய்தித் தளத்தை இவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்த தளத்தில் இச்செய்தி வெளிவந்த தொடுப்பையும் இவர்கள் தரவில்லை. எந்த கட்டுரையை மொழிபெயர்த்தார்களோ அதன் தொடுப்பை கொடுத்து இருக்கலாம், அதையும் இவர்கள் தரவில்லை. மூல தொடுப்பை கொடுக்காமல் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும் கலாச்சாரத்தை என்னவென்றுச் சொல்ல.

இனி இச்செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை அலசுவோம்

4. எளிமையான சவஅடக்கத்தை கண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவ வாய்ப்பு இல்லையா?

ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நற்செயலும் காரணமாக இருக்கலாம், ஒரு அரசரின் சவ அடக்கம், மிகவும் எளிமையாக நடைப்பெறுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு உள்ளது. இங்கு என் சந்தேகம், என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையா என்பதாகும்? மன்னர் மரித்தது உண்மை தான், மன்னரின் சவ அடக்கம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது உண்மை தான் ( மன்னர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பது வேறு விஷயம்). ஆனால், இந்த எளிமையான சவ அடக்கத்தைக் கண்டு, கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா?

இச்செய்தி:

உண்மையாகவும் இருக்கலாம்

அல்லது

பொய்யாகவும், முஸ்லீம்களின் கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.


என் கருத்துப்படி, இச்செய்தியில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, இது உண்மையாக இருக்க குறைவான வாய்ப்பு உள்ளது. ஆனால், பொய்யாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் காண்கின்றேன்.

நான் ஏன் இப்படி முடிவு செய்யவேண்டி வந்தது என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறேன். ஒருவேளை என் கணிப்பு தவறாக இருக்குமானால், அதை தெரிவித்தால், இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இக்கட்டுரையை என் தளத்திலிருந்து எடுத்துவிடுகிறேன்.

1. முதலாவதாக, ஆங்கில மூல தொடுப்பையும் முஸ்லீம்கள் தராமல் ஏன் கட்டுரை எழுதுகின்றார்கள்.

நீங்கள் சொல்ல வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டுரையை பதித்தவர்களில் ஒருவராவது ஆங்கில தொடுப்பை கொடுத்து இருக்கலாம்.

இக்கட்டுரையின் ஆங்கில தொடுப்பை நான் தருகிறேன்.

Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam

P.K. Abdul Ghafour, Arab News

... அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ...

Source: http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005

2. மொழிபெயர்க்கும் போது, விட்டு விட்ட முக்கியமான விவரம்:

இஸ்லாமியர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழ் கண்ட விவரங்களை மொழிபெயர்க்கவில்லை.

"Al-Riyadh Arabic daily reported without mentioning his name."
"ரியாத் நகரில் வெளியாகும் அரபி தின‌ பத்திரிக்கை அவரின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தது"


அதாவது, அரப்நியூஸ் என்ற தளத்தில் வெளியான இந்த செய்தி, "Al-Riyadh Arabic daily " பத்திரிக்கையின் மூல தொடுப்பு இல்லாமல், பெயர் இல்லாமல், நாள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த விவரத்தை ரியாத் நகரில் வெளிவரும் அரபி செய்தித்தாள் வெளியிட்டதாம். இந்த அரப்நியூஸ் தளம் வேறு எந்த ஆதாரத்தையும் தராமல், ஒரே வரியில் தன் ஆதாரத்தை முன்வைத்து விட்டது. சரி, நம் இஸ்லாமியர்கள் அதையாவது மொழிபெயர்த்தார்களா என்று கேட்டால், அதையும் இவர்கள் செய்யவில்லை.

இப்போது நம் சந்தேகங்கள்:

1. ஏன் அரப்நியூஸ் தளம் தான் வெளியிட்ட செய்தி, ரியாதில் தினமும் வெளிவரும் அரபி தினபத்திரிக்கையில் எந்த நாள், எந்த தேதியில் வெளிவந்தது என்று குறிப்பிடவில்லை? இந்த அரப்நியூஸ் தள நிர்வாகிகளுக்கு இச்செய்தி ஒரு பொய்யான செய்தி என்று தெரியுமா?

2. "Al-Riyadh Arabic daily" என்பது ஒரு பத்திரிக்கையின் பெயரா? அல்லது "இந்தியாவில் தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது" என்று சரியான ஆதாரமே இல்லாமல் சொல்வது போல ஒரு பொதுவான விவரமா?

3. பிரபல கிறிஸ்துவ பாதிரியார் (a well-known Christian priest) என்பதன் பொருள் என்ன?

தமிழில் "பிரபல கிறிஸ்தவ பாதிரியார்" என்றும் ஆங்கிலத்தில் "A Well-Known Christian Priest" என்றும் எழுதிவிட்டு, அவர் இஸ்லாமை தழுவியது, ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குடிசையில் நடந்த நிகழ்ச்சி போல ஆதாரமே சொல்லாமல் எழுதினால் எப்படி சகோதரரே? என் சந்தேகம் வலுவானதாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவினார் என்பது ஒன்றும் ஒரு சாதாரண விஷயமல்லவே! மட்டுமல்ல, அவர் இஸ்லாமுக்கு மாறியிப்பாரானால், வேறு ஏதாவது பத்திரிக்கையில் அச்செய்தி வந்திருக்குமே, இப்படி இஸ்லாமியர் அல்லாத பத்திரிக்கையில் வந்ததாக என் கண்ணில் படவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

அப்படியில்லையானால், இந்த பிரபலமானவர் இன்னும் தன் கிறிஸ்தவ சபையையே நடத்திக்கொண்டு, இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? ஒரு பிரபல பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருந்தால், அந்த சபைக்கு முதலாவது தெரியும், அவர் சபையை நடத்தமாட்டார், இந்த விஷயம் குறைந்தபட்சம் இத்தாலியில் அவர் வாழ்ந்த நகரில், ஒரு செய்தியாக செய்தித்தாள்களில் வெளிவந்து இருக்கும். இந்த இணைய காலத்தில், இணையத்திலும் உலாவரும்.

சில முஸ்லீம்கள் "அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் தான், அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடவில்லை" என்று சொல்லக்கூடும். இது பலவீனமான வாதம் ஏனென்றால், அவர் தழுவியது இஸ்லாமை, அப்படியானால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இஸ்லாமியர்களே தருவார்கள், இன்னும் ஒரு விவரம் என்னவென்றால், எந்த கிறிஸ்தவனும் அவரை கொல்லமாட்டான், அப்படி கொல்லும்படி எங்களுக்கு எங்கள் தேவன் கட்டளை கொடுக்கவும் இல்லை, அதாவது ஒரு கிறிஸ்தவர் முஸ்லீமாக மாறினால் அவரை கொல்லுங்கள் என்று இத்தாலியில் இப்படி ஒரு சட்டமும் இல்லை. விஷயம் இப்படி இருக்கும் போது, எப்படி ஆபத்து வரும்? இது நம்பும்படி இல்லை.

4. ஆதாரத்திற்காக இணையத்தில் என் தேடல்:

இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, இணையத்தில் இதற்கு யாரவது பதில் அளித்து இருப்பார்கள் என்று தேடிப்பார்த்ததில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆனால், ஒரு கத்தோலிக்க போரமில் (http://forums.catholic.com/showthread.php?t=70876 ) ஒரு இஸ்லாமிய உறுப்பினர் இதே கட்டுரையை பதித்து இருந்தார்கள். அதற்கு ஆதாரம் என்ன‌? என்று அத்தளத்தில் கேட்கப்பட்டு இருந்தது, இதற்கு அக்கட்டுரையை பதித்த இஸ்லாமியர், தான் அந்த செய்தியை வெளியிட்ட அரப்நியூஸ் தளத்திற்கு மெயில் அனுப்பி, இன்னும் விவரங்களை சேகரித்து, பதிப்பதாக சொல்லியிருந்தார்கள்.

Re: Priest Embraces Islam B/c Of Fahd's Funeral

The story was taken from www.arabnews.com, which is run by Saudi Research & Publishing Co., a Saudi based English-language daily newspaper. It is a well established news outlet and is distributed around the world. It seems they took the story from ar-Riyadh, which is an arabic newspaper.

As for why theres no name, perhaps he didnt wanna be named for fear or to avoid public attention.

Anyhow, i dont mind looking into the story myself, i will write to the writer of the article and ask if he could provide more sources for the story. If he replies, ill post the sources. …..

I think it is fair for those reading this thread to doubt the story. Although what i know from that source is that they are credible, i cannot find anymore sources other than them. And since this is regarding a conversion, it is important there be no shadow of a doubt the story is true.

thanks for all your replies.

Source : http://forums.catholic.com/showthread.php?t=70876

அதே போல, ஒரு கிறிஸ்தவ சகோதரர், வாடிகன் ஏசியாநியூஸ்(AsiaNews, Vatican) செய்தித்தாள் நிறுவத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி யாரும் மாறவில்லை என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். (உண்மையிலேயே இத்தாலி பாதிரியார் இஸ்லாமுக்கு மாறினார் என்பதை ஆதாரத்துடன் நிருபித்தால், இந்த சகோதரருக்கு மெயில் அனுப்பி இவரது செய்தியின் நம்பகத்தன்மையை நான் அறிந்துக்கொள்வேன்). இதையும் படிக்கவும்.

I have received a mail from the Director of Asianews, Vatican.

According his reports no priest embraced to Islam recently from Italy.

If any one has any link with the priest`s name please provide. If you don`t have his name and clear address please don`t.

Source Page 2: http://forums.catholic.com/showthread.php?t=70876&page=2

இந்த கத்தோலிக்க இணையத்தில் இப்பதிவுகள் பதிக்கப்பட்டது கடைசியாக செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டு ஆகும்(மன்னர் காலமானவது 2005 ஆகஸ்ட் மாதமாகும்.) ஆனால், இதுவரை எந்த தகவலும் அந்த இஸ்லாமிய உறுப்பினர் பதித்ததாக தகவல் இல்லை.

5. தமிழ் முஸ்லீம்களிடம் நான் கேட்க விரும்புவது?

இந்த ஒரு செய்தியை பல தளங்களில் பதித்து உள்ளீர்கள், உங்களில் யாராவது அந்த அரப்நியூஸ் செய்தித்தாள் தளத்திற்கு மெயில் அனுப்பி, விவரங்களை தெரிந்துக்கொண்டு பதித்தால், நீங்கள் சொன்னது உண்மை என்று நிருபிக்கப்படும். இந்த வேலையை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம், நீ தான் செய்யனும் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏனென்றால், செய்தியை ஆதாரம் இல்லாமல் வெளியிட்டது நீங்கள், எனவே, ஆதாரத்தை சேகரிக்கும் வேலையும் உங்களுடையது தான். ரியாதில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த "ரியாத் தினசெய்தித்தாள்" பற்றி தெரிந்துக்கொண்டு விவரங்களை சேகரித்து தெரிவியுங்கள். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் நம்பகத்தன்மை, நேர்மை வெளிப்படும், இஸ்லாமுக்காக நீங்கள் படும் பாடுகள் அனைத்திற்கும் உபயோகம் என்பது இருக்கும்.

நீங்கள் இந்த விவரங்களை தரவில்லையானால், பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடும். உங்கள் தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்னவென்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

முடிவுரை: இதுவரை நான் சொன்ன விவரங்களில் ஏதாவது குறைகள் இருக்குமானால், அல்லது இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள் ( isa.koran (at) gmail (dot) com ). அல்லது பின்னூட்டம் இடுங்கள். கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான், நீங்கள் சொன்ன விவரம் உண்மையாக இருக்குமானால், உங்களால் நிச்சயமாக ஆதாரங்களை சேகரிக்கமுடியும். எனக்கு வந்த இந்த சந்தேகம் தீர்க்கப்படலாம்.

என் சந்தேகத்தை மட்டுமே முன்வைத்தேன், ஒருவேளை உண்மையாகவே இத்தாலிய பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருக்கலாம், ஆனால், ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். இச்செய்தி பொய்யாக இருக்கலாம் என்று நம்புவதற்கு அதிகமாக வாய்ப்புக்கள் இருப்பதால் தான் நான் கேட்கிறேன், உங்களை அவமானப்படுத்த அல்ல.

(பின்குறிப்பு: யாராவது ஒரு பொய்யான மெயிலை தயார் செய்து, இது எங்களுக்கு அரப்நியூஸ் தள நிர்வாகத்திலிருந்து வந்தது என்றுச் சொல்லி, மறுபடியும் பொய்யான தகவலை பதித்தால், அதுவும் வெளிவர அதிக நாட்கள் பிடிக்காது என்பதையும் என் அருமை தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).

ரோமர் 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.



 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails