சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு | |
| |
சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது, சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிவுடன் 15,572.18 ல் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவுடன் 15,116 ஆக காணப்பட்டது. சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவிய பாதகமான சூழலின் தாக்கம் காரணமாக வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே, சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவு காணப்பட்டது. பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிவுடன் 15,000 க்கும் கீழே சரிந்து 14,903 என்ற நிலைக்கு சென்றது. டாடா மோட்டார்ஸ், டிஎல்எஃப், பார்தி, ரிலையன்ஸ், பெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனப் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்பட்டன. இந்நிலையில், இன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் 15,066 ல் நிலைகொண்டது. இதனிடையே, தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 127 புள்ளிகள் சரிவுடன் 4,501 ல் நிலைகொண்டது. | |
(மூலம் - வெப்துனி |
Monday, June 9, 2008
சென்செக்ஸ் 506 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment