Ans Tamil Islam: ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை?
| Quote: |
| // abu awwad சொன்னது, ஜூன் 22, 2008 இல் 6:57 பிற்பகல் நண்பரே! நீங்கள் எழுதிய இந்நெடு ஆக்கம் படிக்க சுவையாகத்தான் இருக்கிறது. ஆனால் பெரும் முரண்பாடுகளே. இஸ்லாத்தைப் போல் கிறிஸ்தவத்தில் பிரச்சனை இல்லை. என திரும்பத்திரும்ப கூறியுள்ளீர்கள். // |
Umar said:
"இஸ்லாத்தைப்போல கிறிஸ்தவத்தில் பிரச்சனை இல்லை" என்று நான் இக்கட்டுரையில் அடிக்கடி சொல்லியுள்ளேன். அது ஏன் என்பதை இந்த கட்டுரையில் நான் கொடுத்துள்ள உபதலைப்புக்களை அல்லது காரணங்களை நீங்கள் கவனித்தால் நன்றாக புரியும்.
காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:
இந்த தற்காலத்தில் கிறிஸ்தவர்கள் தீவிரவாதிகளாக மாறி அதற்கு பைபிள் தான் காரணம் என்று சொல்வதில்லை, ஆனால், முஸ்லீம்கள் இதை செய்கிறார்கள். அதனால், தான் இந்த காரணத்தில்(6) சொல்லப்பட்ட விவரம் படி, இஸ்லாமுக்கு இந்த பிரச்சனை உணடு, கிறிஸ்தவத்திற்கு இல்லை என்றேன். நான் ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, இந்த பிரச்சனை இஸ்லாமில் உண்டா இல்லையா என்பதை விவரித்து, பிறகு கிறிஸ்தவத்திற்கு இப்பிரச்சனை உண்டா இல்லையா என்று விவரித்து என் முடிவுரையை கடைசியில் சொல்கின்றேன். நான் இஸ்லாமுக்கு உண்டு என்றுச் சொல்லும் பிரச்சனைகள் "உண்டா இல்லையா" என்பதை நீங்கள் விளக்கவேண்டும், அதை விடுத்து, அடிக்கடி இப்படி சொல்கிறீர்கள் என்று என் மேல் குற்றம் சுமத்தினால் அதனால் ஒரு பயனுமில்லை, நண்பரே.
இன்னும் உள்ள காரணங்களை கவனித்தால், இந்த எல்லா பிரச்சனையும் இஸ்லாமுக்கு உண்டு, ஆனால், கிறிஸ்தவத்திற்கு இல்லை. உதாரணமாக, பல இஸ்லாமிய அறிஞர்களின் வேடிக்கையான பத்வாக்கள், இஸ்லாமிய நாடுகளின் சட்டங்கள் என்று நான் தனித்தனியாக சொல்லியுள்ளேன்.
இன்னும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கையைப் பற்றி பேசாத கேள்வி எழுப்பாத மாற்று மதத்தவர்கள், நாத்தீகர்கள் இருக்கமாட்டார்கள், ஏனென்றால், சமுதாயத்தில் நல்ல மனிதன் என்று நாம் எண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு முகமதுவின் வாழ்க்கை எதிர்மறையாக உள்ளது, இப்படி இருந்தும், நீங்கள் அவர் பின்பற்றத்தகுந்த ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றுச் சொல்கிறபடியால் மக்கள் அனேக கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதே போல இயேசுவின் வாழ்க்கையை கவனித்தால், அவர் 6 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள வில்லை, யாரையும் கற்பழிக்க வில்லை, கொள்ளையிடவில்லை. ஒருவேளை இயேசுவின் வாழ்க்கைப் பற்றி மற்றவர்கள் முக்கியமாக நாத்தீகர்கள் கேள்வி எழுப்பினால், " அவர் செய்த அற்புதங்கள் உண்மையா? இயேசு என்ற ஒரு நபர் வாழ்ந்தாரா? அவர் மனிதனாக பிறந்து எப்படி தெய்வமானார் என்று கேள்வி கேட்கமுடியுமே தவிர, முகமதுவிற்கு எதிராக கேட்கப்படும் கேள்விகள் போல, மிகவும் கேவலமாக மக்கள் கேட்கமாட்டார்கள். எனவே தான் சொன்னேன், இந்த பிரச்ச்னை கிறிஸ்தவத்திற்கு இல்லை, அதாவது, மார்க்கத்தை தோற்றுவித்தவர் அல்லது பரப்பியவரின் நடத்தையில் மக்கள் சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு கீழ்தரமான வாழ்க்கையை இயேசு வாழவில்லை.
| Quote: |
| //Abuawwad said: அப்படியாயின் பல ஆயிரக்கணக்கான வேள்விகள் பதில்கள் என அடங்கிய வெப் தளங்கள் எதற்கு?// |
Umar said:
நான் மேலே சொன்னது போல, இந்த கிறிஸ்தவ ஆங்கில கேள்விபதில் தளங்களில், இயேசுவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கேள்விகள் மக்கள் கேட்கமாட்டார்கள், அதற்கு பதிலாக, சரித்திரம், பூகோலவிவரங்கள், இடங்கள், பெயர்கள், விஞ்ஞானம், தத்துவம், குறிபிட்ட பைபிள் வசனங்களுக்கு பொருள் என்ன? என்று கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். அதற்கு பதில்கள் சொல்லப்பட்டு இருக்கும், அவ்வளவே. ஆனால், இஸ்லாமுக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகள் போல, கேள்விகள் மக்கள் கேட்கமாட்டார்கள்.
| Quote: |
| // Abuawwad Said: உங்களவர்களது கேள்விகளுக்கு பதில், மாற்று மதத்தினருக்கு பதில் என வேறு பிரித்து எதற்கு பல வெப்தளங்கள்?// |
Umar said:
ஆமாம், இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பல கிறிஸ்தவ கேள்விபதில் தளங்கள் உண்டு, நாத்தீகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்ல பல தளங்கள் உண்டு, விஞ்ஞானம் சரித்திரம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல பல தளங்கள் உண்டு. இதில் என்ன தவறு? மட்டுமல்ல, இதையே நானும் செய்கின்றேன், அதாவது, என் தளங்களில் முஸ்லீம்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன், அப்போது தான் தளத்திற்கு தனித்தன்மை இருக்கும். மட்டுமல்ல, நான் இந்து சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளித்துள்ளேன், அவைகளை என் தளமாகிய ஈஸா குர்ஆன் தளத்தில் பதிப்பதில்லை, அதற்கு பதிலாக, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் பதிக்கிறேன். மட்டுமல்ல, ஒரு வேளை நாத்தீகர்களுக்கு நான் பதில் அளிக்க முடிவு செய்தால், அதற்காக ஒரு தனி தளம் மூலமாக அளிப்பேன். ஏனென்றால், ஒவ்வொரு பிரிவிற்கும் பதில் அளிக்கும் விதம் வெவ்வேறு விதமாக இருக்கவேண்டும், என்பதால் இப்படி ஒவ்வொரு குழுவிற்கும் தனி தளங்களை நாங்கள் (கிறிஸ்தவர்கள்) அமைக்கின்றனர்.
| Quote: |
| // Abuawwad said: எல்லா மொழிகளிலும் பைபில் உள்ளது, நாங்கள் அதனைப் படித்து விளங்கிக் கொள்வோம் என்றால், எதற்காக உங்கள் மார்க்கப் போதகர். எதற்காக உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு வெப்தளம்?// |
Umar said:
நல்ல கேள்வியைத் தான் கேட்டு உள்ளீர்கள். "எங்களுக்கு புரியும் மொழியில் பைபிள் இருக்கும்போது, போதகர் எதற்கு, கேள்வி பதில் வெப் தளங்கள் எதற்கு?"
எங்களுக்கு பாஸ்டர் அல்லது பாதிரியார் அல்லது போதகர் என்பவர், ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஜெபிக்கவும், ஒருவரை ஒருவர் உட்சாகப்படுத்தவும், இயேசு செய்த அற்புதங்களை சாட்சியாக சொல்லவும், எங்களை ஒற்றுமைப்படுத்தி, எங்களை வழிநடத்தும் ஒரு தலைவர் அல்லது வழிகாட்டி. மற்றும் ஒரு பள்ளிக்கூடத்தில் பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எப்படியோ அப்படியே இவரும், மனிதர்களில் பல வகையினர் உண்டு, படித்தவர்கள், படிக்காதவர்கள், படித்தவுடன் புரிந்துக்கொள்ளும் ஞானம் உடையவர்கள், ஞானம் குறைந்தவர்கள் என்று பல வகையினர். இவர்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி ஒரு ஐக்கியம் உண்டாக்கி சகோதரத்துவத்தை உண்டுப்பண்ணி, வழி நடத்தும் ஆசான் தான் போதகர் என்பவர்.
மட்டுமல்ல, எங்கள் போதகர்கள் ஒன்றும் எபிரேய மொழியில், கிரேக்க மொழியில் படித்து எங்களுக்கு விளக்கம் அளிப்பதில்லை. அவர் ஒன்றும் வேதத்தில் இல்லாத சட்டமொன்றை இயற்றி இதை நீங்கள் பின்பற்றவேண்டும் என்றும் சொல்வதில்லை, அப்படி யாராவது சொன்னாலும் நாங்கள் அதற்கு கீழ் படியமாட்டோம், ஏனென்றால், வேதத்திற்கு எதிராக சொல்லப்படும் விவரங்களை வகையறுக்க எங்களுக்கு தெரியும். எனவே, போதகர் என்பவர், பல விதமான மக்களை ஒன்று சேர்த்து ஒரு ஐக்கியத்தை உண்டுபண்ணி, சோர்ந்துப்போகும் போது, வேதத்திலிருந்து எடுத்துக்காட்டுக்களை விளக்கு எங்களை உட்சாகப்படுத்தும் ஒரு வழிகாட்டி அவ்வளவே, மட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தியை கேள்விப்படாத மக்களுக்கு எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்த உட்சாகப்படுத்துகிறவர். வழி இயேசுக்கிறிஸ்து, போதகர்கள் எங்கள் வழிகாட்டிகள்.
| Quote: |
| // Abuawwad said: ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அப்படியில்லை, எங்களுக்கு தேவையான எல்லா கோட்பாடுகளையும், சத்தியங்களையும் நாங்கள் பைபிளை தமிழில் படிப்பதினால் தெரிந்துக்கொள்கிறோம். ஓ! மக்கள் கேட்கிறார்கள் என்பதற்காகவா? மக்கள் கேட்கிறார்கள் என்றால், முன்னர் இருந்தே கிறிஸ்தவத்தில் பிரச்சனை இருக்கிறது. மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என சமாளித்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். // |
Umar Said:
மக்கள் கேட்கக்கூடாது என்று நான் சமாளித்தால் மட்டும் மக்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன?
நான் சொல்லவந்தது, வருஷத்திற்கு 1000 பத்துவாக்கள் எங்கள் போதகர்கள் புதிதாக சொல்வதில்லை, எங்களுக்கு தேவையானது எங்கள் பைபிளில் மட்டுமே உள்ளது. கடந்த 1400 ஆண்டுகளாக உங்கள் இஸ்லாமிய இமாம்கள் பத்துவாக்கள் எழுதிக்கொண்டு தான் இருக்கின்றனர், மட்டுமல்ல, ஒரு சில ஆண்டுகள் சரி என்று சொல்லும் பத்துவாக்கள் திடீரென்று மாற்றிவிடுகின்றனர். அது தவறு என்று சொல்லிவிடுகின்றனர். எங்களுக்கு அப்படியில்லை.
ஒரு இஸ்லாமிய அறிஞர் சொல்வாராம், "இனி பெண்கள் ஆண்களோடு தனியாக வேலை செய்யவேண்டுமென்றால், தன் தாய்ப்பாலை அம்மனிதர்களுக்கு ஊட்டிவிட்டால், அவர்கள் இனி ஒன்றாகவேலை செய்யலாம்" என்று, உடனே வேறு இஸ்லாமிய அறிஞர்கள் இந்த பத்வா செல்லாது என்றுச் சொல்வார்களாம், மறுபடியும் இதைச் சொன்னவர் "நான் தவறு செய்தேன் என்று" தன் பத்வாவை திரும்ப வாங்கிக்கொள்வாராம். இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மோசமான சட்டங்களை எங்கள் போதகர்கள் சொல்லமாட்டார்கள், அப்படி சொன்னார்களானால், அதை எந்த கிறிஸ்தவனும் கீழ்படியமாட்டான்.
| Quote: |
| // Abuawwad said: இக்காலம் பொல்லாதது. இனியும் விட்டுவிட்டால் எம்மை உருட்டி எடுத்துவிடுவார்கள் என்ற எண்ணமா? எது எப்படி இருந்தாலும், எத்தனை கேள்விகள் வந்தாலும் ஒரே பதிலைக் கூறலாமே!!!!! அதுதான்: "உங்கள் மொழியில் பைபில் உள்ளது படியுங்கள் விளங்கிக் கொள்வீர்கள்" எதற்காக ஆயிரக்கணக்கான கேள்விகள் அதற்கென பதில்கள்? // |
Umar Said: ஒரு வேதம் என்று இருந்தால், அதற்கு கீழ் கண்ட கேள்விகள் எழும்ப முடியும் என்பது என் கருத்து:
1. அவ்வேதம் எழுதிய சரித்திரம் பற்றிய சந்தேகம்?
2. விஞ்ஞானத்திற்கு இது எதிராக உள்ளதா?
3. நடைமுறைக்கு ஏற்ற விவரங்களை இவ்வேதம் சொல்கின்றதா?
4. தோற்றுவித்தவர் அவர் தானா அல்லது காலப்போக்கில் அப்படிப்பட்டவரை மக்கள் கற்பனையாக உருவாக்கினார்களா?
5. அதை தோற்றுவித்தவரின் நடத்தை பின்பற்ற தகுந்ததா? அல்லது மிகவும் கீழ் தரமாக உள்ளதா? அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதரா அல்லது அப்படி நடித்தாரா? கிடைத்துள்ள விவரங்களின் படி அவர் எப்படி வாழ்ந்தார்...
6. அவரை நாம் பின்பற்றலாமா, பின்பற்றத் தகுந்த நல்ல குணங்கள் அவரிடம் உள்ளதா?
என்று பல கேள்விகள் எழும்பும். என் கருத்துப்படி, மேலே உள்ள முதல் நான்கு வகையான கேள்விகளை மக்கள் பைபிளுக்கு எதிராக கேட்கின்றனர். ஆனால், அதோடு கூட தோற்றுவித்தவரின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, இன்று பின்பற்றுபவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு எழும்பும் கேள்விகள் , இஸ்லாமுக்கு உண்டு, இது எங்களுக்கு இல்லை என்றேன்.
| Quote: |
| // Abuawwad said: சகோதரா? பேனை எழுதுகிறது. துட்டும் பலகையில் கரம் விளையாடுகிறது. என்பதற்காக முரண்பாடுகளை அடுக்கலாமா? ஆக எனக்கு விளங்கியது ஒன்றுதான்: கிறிஸ்தவத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை இருக்கிறது. தற்போது நீங்கள் எழுதியுள்ளது போல் எதையாவது கூறி உங்கவர்கள் சமாளித்தார்கள். இன்றைய காலத்தில் இனியும் சமாளிக்க முடியாது என்பதற்காக பெயருக்கு சில வெப்தளங்கள்!!!!!! // |
Umar Said:
கேட்கிறவன் பாமர மக்களாக இருக்கிறான், அப்படி எதிர் கேள்வி கேட்டால், அவனை கொன்று எதிரியே இல்லாமல் வாழலாம் என்ற நோக்கில் உங்கள் முகமது அடிக்கி வைத்த முரண்பாடுகளை விடவா நான் அதிகமாக எழுதிவிட்டேன், சொல்லுங்கள்.
"எதையாவது எழுதி பிரச்சனையில் மாட்டிக்கொண்டு, பொய்களைச் சொல்கிறவன் நான் அல்ல".
நீங்கள் மட்டும் நேர்மையாக உள்ளவர்களாக இருந்திருந்தால்:
ஆம், முஸ்லீம்களில் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, இஸ்லாமுக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவிட்டார்கள் என்று வேதனைப்படுவீர்கள்.. ஆனால், இதை நீங்கள் செய்யவில்லை... காரணம்....?
ஆம், எங்கள் அறிஞர்களில் சிலர் முந்திரிக்கொட்டைப்போல, முந்திக்கொண்டு இஸ்லாமுக்கு ஏற்காத பத்வாக்களை சில நேரங்களில் சொல்லி, இஸ்லாமுக்குகெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள் என்றுச் சொல்லி,... இப்படிப்பட்ட நபர்களிடமிருந்து இஸ்லாமை காப்பாற்றும் என்று உங்கள் இறைவனிடம் கேட்டு இருப்பீர்கள்...
ஆம், சில இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஷரியா சட்டம், இஸ்லாம் படி அல்லாத சட்டம். மற்றும் அதனால், உலகமக்களின் பார்வையில் இஸ்லாம் வேடிக்கையாக்கபப்ட்டது என்றுச் சொல்லி, ஒத்துக்கொண்டு, இதை தவிற்க நாங்கள் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறோம் என்றுச் சொல்லி, இஸ்லாமின் எதிர்கால முன்னேற்றத்திற்கு(!?) வழி வகை செய்து இருப்பீர்கள்.
ஆனால், இதை நீங்கள் செய்யவில்லை அதற்கு பதிலாக... உங்கள் மக்கள் செய்வதெல்லாம் சரியானது என்று சொல்வது போல அங்கீகரித்து,.. என்னிடம் கேள்வி எழுப்புகிறீர்கள்...
| Quote: |
| // Abuawwad சகோதரா? வெப்தளங்கள் யாருக்கு? உங்களைப் போல் படித்தவனுக்கு. உங்களைப் போல் இன்டர் நெட்டில் மிதப்பவனுக்கு. உங்களைப் போல் பணவசதி படைத்தவனுக்கு. உங்களைப் போல் எல்லோரும் இருப்பார்களோ?!!!!!! அன்றன்றைக்கு ஏதோ ஒரு வகையில் காலத்தைக் கடுத்துபவனுக்கு மார்க்கமும் தேவையாக உள்ளது. அவனுக்கு எழும் சந்தேகங்களுக்கு நேரடியாக என்ன வைத்துள்ளீர்கள். // |
Umar said:
கண்டிப்பாக, பாமர மக்களுக்கும் படித்தவனுக்கும் சந்தேகங்கள் தீர்க்க வழி தேவைப்படுகின்றது.
கிறிஸ்தவத்தை பொருத்தவரையில், அனேக புத்தகங்கள் கேள்வி பதில் என்று எழுதப்பட்டுள்ளது, பைபிளுக்கு உரைகள் என்று பல உரைகள் உண்டு, சரித்திர புத்தகங்கள் உண்டு. மட்டுமல்ல, எங்கள் சபைகளில் ஞாயிறுகளில் பாமர மக்களுக்கு வரும் சந்தேகம் கூட தீர்க்கப்படுகின்றது.
வாலிபர் கூட்டம் என்றுச் சொல்லி, வாலிபர்களுக்கு அறிவுரை சொல்லப்படுகின்றது,
பெண்கள் கூடுகை என்றுச் சொல்லி, பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லப்படுகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாட்டில் இயேசுவைப்பற்றிச் சொல்ல முடிவு செய்தால்,
முதலாவது:
அம்மக்களுக்கு படிப்பு சொல்லித்தரப்படுகின்றது
அவர்கள் மொழியிலே முடிந்த அளவிற்கு பைபிளை மொழிபெயர்த்து தரப்படுகின்றது
(ஏன்னென்றால், போதகர் சொல்வது பைபிளில் உள்ளது தானே என்பதை அம்மக்களே தெரிந்துக்கொள்ளவேண்டும், மட்டுமல்ல, வாரம் ஒரு முறை சபை கூடும் போது மட்டுமே பைபிளை படித்துக்கொள்ளவேண்டும், மற்ற நாட்களில் படிக்கக்கூடாது என்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காக, அவர்கள் படிக்கும் மொழியிலேயே மொழிபெயர்த்து தருகின்றோம்)
நண்பரே, இணையம் எப்போது வந்தது, 1990 லிருந்து தான் கொஞ்சம் அதிகமாக பரவி எல்லா மக்களும் பயன்படுத்தும் விதத்தில் வந்தது, அதற்கு முன்பாக, இணையம் எங்கே இருந்தது, சாதாரண மக்கள் பயன்படுத்தும்படி? எல்லாம் புத்தகங்கள், போதகர்களின் விளக்கங்கள் தான் நிவர்த்தி செய்தன. எத்தனை கேள்வி பதில் புத்தகங்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள இணையத்தில் தேடிப்பாருங்கள், தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள், நான் தேடித்தருகின்றேன்.
கடைசியாக, ஒன்றை நான் தெளிவாகச் சொல்லமுடியும், எங்கள் உள்ளத்தில் வாழும் பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு சரியான வழியில் நடத்துகிறவராக இருக்கிறார், அவர் எங்களை நடத்துகின்றார், அறிவுரை சொல்கிறார், கண்டிக்கிறார். எனவே, இத்தனை வசதிகள் ஒரு கிறிஸ்தவனுக்கு உண்டு.
(மறுபடியும் நீங்கள் கேட்கலாம், இப்படித்தானே நாங்களும் செய்கின்றோம் என்று! ஆனால், பிரச்சனை என்னவென்றால், பாமர கிறிஸ்தவனுக்கு வரும் கேள்விகள் சந்தேகங்கள் இயேசுவின் நடத்தைக்குறியதல்ல, கிறிஸ்த போதகர்களின் பத்வா குறித்ததல்ல, கிறிஸ்தவ தீவிரவாதிகள் குறித்ததல்ல, என்பதை கவனிக்கவும்.).
| Quote: |
| // Abuawwad Said: இன்னென்ன வெப்தளங்களைப் பாருங்கள் எனக் கூறப் போகிறீர்களோ?!!!!!!! இப்போதுதான் தயாராகுறீர்கள் என்றால், இவ்வளவு காலமும் எங்கிருந்தீர்கள்? // |
Umar Said:
நண்பரே, நான் மேலே சொன்னது போல, படித்து இணையத்தை பயன்படுத்தும் கிறிஸ்தவனுக்குத் தான் இந்த இணையங்கள் தளங்கள் அனைத்தும். சாதாரண கிறிஸ்தவனுக்கு, மக்களுக்கு நான் மேலே சொன்ன வசதிகள், புத்தங்கள், பரிசுத்த ஆவியாவரே போதும்.
சரி... காலத்திற்கு ஏற்றார்போல, புத்தகங்களை இணையவடிவமாக்க ஒரு சில தளங்கள் தயார் செய்துக்கொண்டு இருக்கின்றோம், அவ்வளவே. இன்னும் சொல்லப்போனால், நான் சொன்னது போல, வெளிநாடுகளில் இணையம் பரவலாக பயன்படுத்துவதினால், அவர்கள் தங்கள் புத்தகங்களை இணையவடிவம் செய்துள்ளனர். ஆனால், நம் தமிழ் நாட்டில் இப்போது தான் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குழுவாக அல்லாமல், தனி மனித முயற்சியே. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளம் ஒரு ஸ்தாபனம் மூலமாக அல்லாமல், தனியாக சில சகோதரர்கள் ஆரம்பித்தார்கள். என் பங்கிற்கு ஓசியில் தளம் ஜியோசிட்டி கொடுக்கின்றது என்பதால், ஒரு சில கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கின்றேன். இன்னும் சில கிறிஸ்தவர்களும் இப்படியே செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ் கிறிஸ்தவர்கள் இணையத்தை தங்கள் மார்கத்திற்காக் கொஞ்சமாக பயன்படுத்துகிறார்கள் என்று எங்கள் மேல் நீங்கள் குற்றம் சுமத்தினால், அதை நான் தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்களைப்போல மறுக்க மாட்டேன், மற்றும் உங்கள் இந்த உட்சாகம் மற்ற கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். நன்றி சகோதரரே.
| Quote: |
| // Abuawwad Said: ஆக சகோதரா!!!!!!!!! நானும் இஸ்லாத்தைப் படித்து ஓர் இஸ்லாமியனாக வாழ்கிறேன். முடியுமெனில் இஸ்லாத்தைப் படியுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். // |
Umar Said:
உங்கள் உட்சாகத்திற்கு நன்றி, நானும் குர்ஆனை படித்துக்கொண்டு தான் இருக்கின்றேன், ஹதீஸ்களை படித்துக்கொண்டு தான் இருக்கின்றேன். மட்டுமல்ல, நீங்களும் பைபிளைப் படித்து உண்மை இறைவனை கண்டுக்கொள்ளுங்கள் என்று உங்களை உட்சாகப்படுத்துகின்றேன்.
| Quote: |
| //Abuawwad Said: கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் விரல் விட்டு எண்ணப்படக்கூடியவர்கள்தான். ஆனால் இஸ்லாத்திற்கு திரும்பியவர்களை எண்ணிப்பாருங்கள்? முடியுமெனில் யளளரnயெ.றழசனிசநளள.உழஅ தளத்திற்கு செல்லுங்கள் அவர்களின் பட்டியல் வீடியோக்களில் இருக்கிறது பாருங்கள். // |
Umar Said:
மன்னிக்கவேண்டும் நண்பரே மன்னிகவும். நீங்கள் ஒரு தவறான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள். இஸ்லாமை தழுவுகிறவர்கள் தான் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். ஆனால், குடும்ப கட்டுப்படு இல்லாமல், குடும்பத்தின் நிலையை புரிந்துக்கொள்ளாமல், அதிகமாக பிள்ளைகளை பெற்றுக்கொண்டு இஸ்லாமை வளர்க்கிறீர்கள் நீங்கள். ஆனால், கிறிஸ்தவத்தை தழுவுகிறவர்கள் தான் அதிகம், அதுவும் இஸ்லாமிலிருந்து அனேகமாயிரமானவர்கள் பொய்யை விட்டு உண்மைக்கு செவி சாய்க்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவத்திற்கு மாறினால் கொலை என்று இஸ்லாமிய சட்டமிருக்கின்ற இஸ்லாமிய நாடுகளிலேயே அனேகமாயிரமாயிரமாக மக்கள் இயேசுவிடம் வருகின்றனர்.
(உனக்கென்ன பொறாமை என்று கேட்காதீர்கள், எனக்கொன்றும் பொறாமை இல்லை, ஆயிரமாயிரமான பாமர மக்கள், உணவிற்கு வழியில்லாம, ஏழ்மையில் முஸ்லீமாக வாழ்வதினால் என்ன பயன் என்றுச் சொல்லுங்கள்.)
அமெரிக்காவில் இஸ்லாமை தழுவிய சில ஆண்டுகளிலேயே இஸ்லாமை விட்டுமக்கள் வெளியேறி விடுகிறார்கள் என்று ஒரு இஸ்லாமிய பேராசிரியர் ஆராய்ச்சி செய்துள்ளார்.
அதன் தொடுப்பை இங்கு பாருங்கள்.
75% of New Muslims become Apostates - Muslim scholars admit.
Why Most of the New Muslims Leave Islam(Become Apostates) in few Years( in US) ?
-A Reasearch by Prof. Ilyas Ba Yunus
http://www.youtube.com/watch?v=v8EC8-aVlrE
| Quote: |
| // Abuawwad said: அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு அல்லாஹ்வின் அடியான். // |
Umar said:
கண்டிப்பாக இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
In Christ.
Umar



No comments:
Post a Comment