புதுடெல்லி, ஜுன். 19-
இந்தியாவில் வடகிழக்கு பகுதி எல்லையில் உள்ள சிக்கிம் மாநிலம் தங்களுக்குதான் சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. இங்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் சீன ராணுவ வீரர்கள் அடிக்கடி சிக்கிமுக்குள் அத்து மீறி நுழைவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று சீன ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் சிக்கிமுக்குள் நுழைந்தனர். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ளே வந்த அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்கே தங்கியிருந்து விட்டு பின்னர் திரும்பி சென்றனர்.
இதுபற்றி இந்திய ராணுவ அதிகாரிகள் மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி ராணுவ அதிகாரிகள் கூறும்போது இந்தியா- சீனா எல்லை 4,057 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இது போன்ற அத்து மீறல் அடிக்கடி நடக்கிறது என்றனர்.
No comments:
Post a Comment