சென்னை, ஜுன். 26-
"பாட்ஷா'', "காதலன் உள்பட ஏராள மான தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நக்மா. இந்து மதத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.
இதையடுத்து அவர் கடந்த மாதம் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாலுமாவடி "ஏசு விடுவிக் கிறார்'' நிறுவனர் மோகன் சி.லாசரஸ் நடத்திய பிரார்த் தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நக்மா பேசும் போது, "பல் வேறு பிரச்சினைகளில் சிக் கித் தவித்த என்னை ஏசு கிறிஸ்து காப்பாற்றினார். அவர் நான் செய்த பாவங் களை மன்னித்து விடுதலை அளித்தார்.
அவர் என் வாழ்வில் செய்த அற்புதங்கள் பற்றி உலகம் முழுவதிலும் பிரசா ரம் செய்வேன்'' என்றார். இதையடுத்து சில பத்திரிகைகளில் "நக்மா மதம் மாறவில்லை. அவர் கிறிஸ் தவ பிரசாரம் எதிலும் ஈடு பட மாட்டார்'' என்று செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில் நக்மா மதம் மாறிய பிறகு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் முதன் முறையாக கிறிஸ்தவ போதனை செய்கிறார். இக்கூட்டம் அங்குள்ள "ஏசு விடுவிக்கிறார்'' தேவனுடைய வீட்டில் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இந்திய நாட்டின் நல னுக்காக நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் நக்மா தன் வாழ்வில் ஏசு கிறிஸ்துவால் நடந்த அற்புதங்கள் பற்றி பேசுகிறார். மேலும் தான் சினிமா துறை மற்றும் சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், அதில் இருந்து ஏசு எப்படி தன்னை மீட்டார் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.
இக் கூட்டத்திற்கு `ஏசு விடுவிக்கிறார்' நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்குகிறார். இக் கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி, பிரத மர், முதல்-மந்திரிகள், மத்திய -மாநில மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் நலனுக் காக பிரார்த்தனை செய்யப் படுகிறது.
No comments:
Post a Comment