Wednesday, June 11, 2008

எங்கள் எல்லைக்குள் நுழைந்தால் கடுமையான விளைவை சந்திப்பீர்கள்'; சிங்கள ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை

 

கொழும்பு, ஜுன்.11-

இலங்கையில் தனி நாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை அரசு விலக்கி கொண்டது.

இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்கடந்த சில வாரங்களாக விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இதில் ராணுவத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் அந்நாட்டில் வலுத்து வருகிறது.

இதுபற்றி விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பொதுச்செயலாளர் புலித்தேவன் நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வடக்கு இலங்கை பகுதியில் எங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் தாக்குதல்களை நடத்த முயற்சித்தால் சிங்கள ராணுவம் கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும். ஏற்கனவே அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்காக இலங்கையின் வீரர்கள் அதிக அளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் பெரும் உயிர்ச் சேதத்தை அடைவார்கள்.

சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்றால் எங்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களிடம் முதலில் நாங்கள் பேசவேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்தால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும்.

ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு தயாராக ள வடக்குப் பகுதியில் ராணுவம் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானங்கள் மூலம் குண்டு வீச்சு நடத்துகிறது.

இல்லை. அதுதான் பிரச்சினையே.

மேற்கண்டவாறு புலித்தேவன் கூறினார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails