கொழும்பு, ஜுன் 11-
விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி சிங்கள கடற்படை தளத்தை அழித்தனர்.
இலங்கையின் வட பகுதி யில் உள்ள மன்னார் தீவில் சிங்கள கடற்படை மற்றும் தரைப்படை தளம் உள்ளது.
இன்று அதிகாலை 2 மணியளவில் விடுதலை புலிகளின் கடற்புலிகள் கமாண்டோ படையினர் படகுகளில் அங்கு வந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் சிங்கள படையினர் நிலை குலைந்து போனார்கள். 10 நிமிடத்தில் கடற்படை தளம் முழுவதையும் விடு தலைப்புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த சண்டையில் 10 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த ராடார் கருவி உள்பட ஏராள மான ஆயுதங்களை விடு தலைப்புலிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
இதுபற்றி விடுதலைப் புலிகள் செய்தி தொடர் பாளர் ராசையா இளந்திரை யன் கூறும் போது "கடந்த மாதம் வீர மரணம் அடைந்த கடற்புலிகள் சிறப்பு எந்திர பொறி யாளர் கேனால்காயு நினை வாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 10 நிமிடத்தில் வெற்றிகரமாக படைத்தளம் கைப்பற்றப்பட்டது. மன்னார் தீவில் பெரும் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள இந்த தளத்தை வெற்றி கரமாக தாக்கி இருக்கிறார்கள். என்றார்.
No comments:
Post a Comment