Monday, June 30, 2008

ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்

ஜெர்மனியை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்
    

வியன்னா: ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மணியை வீழ்த்தி ஈரோ புட்பால் சாம்பியன் ஆனது ஸ்பெயின்.

இந்த வெற்றியையடுத்து ஸ்பெயின் முழுவதும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது. தலைநகர் மேட்ரிட்டில் ஆயிரக்கணக்கான புட்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மிக விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் பெர்னாண்டோ டோரெஸ் போட்ட ஒரே கோல் ஸ்பெயினை வெற்றிக்கு இட்டுச் சென்றது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் டோரஸ் இந்த கோலைப் போட்டார்.

இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என்ற முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினாலும் ஸ்பெயின் தடுப்பாட்டத்தில் பின்னியெடுத்தது. இதனால் கடைசி வரை ஜெர்மனியால் கோல் ஏதும் போட முடியவில்லை.

இதன்மூலம் 44 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது ஸ்பெயின். கடந்த 1964ம் ஆண்டில் கடைசியா சாம்பியன்ஷிப்பை வென்றது. அந்த ஆண்டு சோவியத் யூனியனை வென்று சாம்பியனான ஸ்பெயின், இப்போது ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது.

மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி இம்முறை தோல்வியை தழுவியுள்ளது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails