பூமியதிர்ச்சியை முன்னறிவிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிவதில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
விண்ணில் சஞ்சரிக்கும் செயற்கைக் கோள்களின் துணையுடன் பூமியின் வளிமண்லடத்தில் உள்ள அயன்படையில் (ionosphere) நிகழும் குழப்பங்களை அவதானிப்பதன் அடிப்படையில் பூமி அதிர்ச்சியை எதிர்வு கூற முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் வளிமண்டலத்தில் உள்ள அயன்படையில் பாரிய குழப்பங்கள் நிகழ்வது தொடர்சியாக நாசா விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த மே 12 இல் சீனாவில் நிகழ்ந்த பூமியதிர்ச்சிக்கு முன்னரும் கூட வளிமண்டல அயன்படையில் முன்னர் அவதானிக்கப்பட்டது போன்ற குழப்பங்கள் நிகழ்ந்திருந்தன என்று அவர்கள் தாங்கள் திரட்டிய தரவுகளை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.
பூவியோட்டில் உள்ள பாறைப்படைகளில் ஏற்படும் மின் அழுத்த மாற்றங்கள், வளிமண்டல அயன்படையில் தூண்டும் குழப்பங்களுக்கும் அவற்றைத் தொடர்ந்து ஏற்படும் பூமி அதிர்ச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது அவதானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
எதுஎப்படியோ பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறும் தொழில்நுட்பம் வளரின் பூமியதிர்சியால் ஏற்படும் மனிதப் பேரவலங்கள் தடுக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை நிச்சியமாகக் கூறலாம்.
No comments:
Post a Comment