Friday, June 20, 2008

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை

புதுடெல்லி, ஜுன்.21-

ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 24-ந்தேதி முதல் ஜுலை 6-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. பங்கேற்கும் அணிகள் ஏ, பி என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. `ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) ஆகிய அணிகளும், `பி' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதன்படி 2-வது சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகளும் தங்களுக்கு தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் அடிப்படையில் முதல் 2இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்த போட்டி `ஸ்டார் கிரிக்கெட் ஆசிய கோப்பை' என்று அழைக்கப்படும். இந்த போட்டிகள் அனைத்தையும் இ.எஸ்.பி.என். மற்றும் ஸ்டார் கிரிக்கெட் டெலிவிஷனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. போட்டி அட்டவணை வருமாறு:-

ஜுன்.24: வங்காளதேசம்-யு.ஏ.இ. மாலை 3.20 லாகூர்

: பாகிஸ்தான்-ஹாங்காங் மாலை 3.30 கராச்சி

ஜுன்.25: இலங்கை-வங்காளதேசம் மாலை 3.30 லாகூர்

: இந்தியா-ஹாங்காங் மாலை 3.30 கராச்சி

ஜுன்.26: இலங்கை-யு.ஏ.இ. மாலை 3.20லாகூர்

: பாகிஸ்தான்-இந்தியா மாலை 3.30 கராச்சி

ஜுன்28: ஏ2-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுன்.29: ஏ1-பி1 மாலை 3.30 கராச்சி

ஜுன்.30: ஏ1-ஏ2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.2: பி1-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.3 ஏ1-பி2 மாலை 3.30 கராச்சி

ஜுலை.4 ஏ2-பி1 மாலை 3.30 கராச்சி

ஜுலை.6 இறுதிப்போட்டி மாலை 3.30 கராச்சி
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails