Wednesday, June 11, 2008

சூடான் நாட்டில் தரை இறங்கும் போது விமானம் தீப்பிடித்து :120 பயணிகள் பலி

சூடான் நாட்டில் தரை இறங்கும் போது விமானம் தீப்பிடித்து :120 பயணிகள் பலி

கார்டூம், ஜுன். 11-

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானுக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜோர்டான் தலை நகர் அம்மானுக்கு சென்று விட்டு மீண்டும் சூடானுக்கு திரும்பி கொண்டிருந்தது. "ஏர்பஸ் ரக 310'' வகையை சேர்ந்த இந்த விமானத்தில் 14 விமான ஊழியர்கள் உள்பட 217 பேர் பயணம் செய்தனர்.

வழியில் விமானம் சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கன் நகரில் இறங்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப் பட்டது. சூடானில் உள்ள கார்டூம் நகர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது வானிலை மோசமாக இருந்தது. ஆனா லும் விமா னத்தை பைலட் தரை இறக்கினார்.

விமானம் ஓடு தளத்தில் இறங்கி சிறிது தூரம் ஓடியது. அப்போது திடீ ரென விமானத்தில் ஒரு என்ஜின் வெடித்தது. இதனால் விமா னத்தில் தீப்பிடித்தது. தீ மள மளவென விமானம் முழுவதும் பரவியது. பய ணிகள் அலறினார்கள். உடனே விமான ஊழியர்கள் அவசர கதவை திறறந்து விட்டனர்.

விமான நிலையத்தில் இருந்த மீட்பு படையினரும் விரைந்து வந்து விமானம் மத்தியில் உள்ள வாசலில் ஏணிப்படியை பொருத் தினார்கள். அதன் வழியாக பயணிகள் வெளியே இறங்கி ஓடி வந்தனர். பலர் விமானத்தில் இருந்து கீழே குதித்தனர்.

ஆனால் பல பயணிகள் விமானத்துக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் கருகி பலியானார்கள். மொத்தம் 120 பயணிகள் பலியாகி விட்டதாகவும், 97 பேர் காப்பாற்ற பட்டதாகவும் விமான நிலைய மருத்துவ அதிகாரி முகமது உஸ்மான் தெரிவித்தார்.

உயிர் தப்பியவர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களில் பல ரின் உடல்கள் எரிந்து விமானத்தோடு சாம்பலாகி விட்டது. சில உடல்கள் கரிக் கட்டையாக கிடந்தன. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்தன. 9 பேர் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

விமானத்தில் தீப் பிடித் ததும் அங்கிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன் றனர். ஆனால் அந்த முயற்சி பலனிளிக்கவில்லை. முற்றிலும் எரிந்து நாச மாகி விட்டது. விமான பயணிகளை வரவேற்க ஏராளமான உறவினர்கள் விமான நிலையத்தில் வந்து காத்திருந்தனர். விமானம் தீப் பிடித்தது தெரிந்தவுடன் அவர்கள் கதறி அழுதனர்.

சூடான் நாட்டில் பயன் படுத்தப்படும் பயணிகள் விமானங்கள் மிகவும் பழமை யானவை அவற்றை சரியாக பராமரிப்பது இல்லை. இது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சூடானில் 2003-ம் ஆண்டு இதே போல ஒரு விமானம் விழுந்து நொறுங்கி 115 பயணிகள் பலியானார்கள். கடந்த மாதம் குட்டி விமா னம் ஒன்று விழுந்து நொறுங் கியதில் சூடான் ராணுவ மந்திரி உள்பட 22 ராணுவ அதிகாரிகள் பலியானர்கள்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails