Friday, June 27, 2008

பெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி

 
பெண் புலி இறுதி சடங்கில் பிரபாகரன் மனைவி
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க பெண் தளபதி செல்வியின் இறுதிச் சடங்கில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி பங்கேற்றார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி வெளி நிகழ்ச்சிகளில் மிகவும் அரிதாகத்தான் கலந்து கொள்வார். இந்த நிலையில் மரணமடைந்த, விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு ராணுவப் பயிற்சியாளரான செல்வியின் இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டார்.

செல்வி, மூத்த பெண் விடுதலைப் புலி தளபதி ஆவார். பல போர்களில் இவர் பங்கேற்றுள்ளார். சோதிய படையின் துணைத் தலைவராக செயல்பட்டார்.

சமீபத்தில் இவர் மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கு கிளிநொச்சியில் நடந்தது. இவரது இறுதிச் சடங்கில் மதிவதனி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பலரும் பேசினர். இருப்பினும் மதிவதனி உரை எதுவும் நிகழ்த்தவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய விடுதலைப் புலிகள் இயக்க பெண்கள் படைப் பயிற்சி மையத்தின் மூத்த பயிற்சியாளரான சஞ்சனா கூறுகையில், செல்வி, 1995ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பல்வேறு போர் முனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டவர்.

வீராங்கனையாக மட்டும் இல்லாமல் கவிதை எழுதும் திறனும் படைத்தவர் செல்வி. நன்கு பாடவும் செய்வார். விடுதலைப் புலிகளின் ரேடியோ மற்றும் டிவியிலும் அவர் பல நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளார்.

செல்வியின் வீர, தீரத்தைப் பாராட்டி, 34 நாள் பயிற்சிக்குப் பின்னர் அவரை மகளிர் போர் பயிற்சிக் கழகத்தின் மூத்த நிர்வாகியாக புலிகள் நிர்வாகம் நியமித்தது என்றார்.

செல்வி எப்படி இறந்தார், அவரது வயது என்ன என்ற விவரங்களை புலிகள் இயக்கம் வெளியிடவில்லை.

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails