Tuesday, June 24, 2008

இலங்கை இராணுவம் சொல்லும் செய்தி உண்மையா?

ஒரே வாரத்தில் 52 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் சொல்கிறது

கொழும்பு, ஜுன். 25-

விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீதும், தமிழர் பகுதிகளில் குடியிருப்புகள் மீதும் சிங்கள விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை விரட்டி அடிக்கிறார்கள்.

ஆனாலும் கடந்த ஒரே வாரத்தில் பல்வேறு இடங்களில் 52 விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாத அரசு ராணுவத்துக்கு கூடுதல் ஆட்களை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

ராணுவத்தில் சேருமாறும் அதிக சம்பளம் கிடைக்கும் என்று கவர்ச்சி வாசகங்களுடன் இளைஞர் களை கவரும் வகையில் அரசு விளம்பரம் செய்து வருகிறது.

ஏற்கனவே ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் திரும்ப வந்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி மீண்டும் சேர்த்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

12 ஆயிரம் பேர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிப்பிடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே திரும்பி வந்துள்ளனர்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails