Saturday, June 7, 2008

ஜூனியர் விகடனனின் செய்தி உண்மையானதா?ஜெய்பூர் குண்டு வெடிப்பு:சீனாவின் சதி கண்டு பிடிப்பு,ரஷ்யாவின் தலையீடு

 
 
 
செப்டம்பர் 11 அன்று அமேரிக்க இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட போது  இந்திய ஜிஹாதி பத்திரிக்கைகளும் ஜிஹாதிகளை காக்காய் பிடிக்கும் மற்றவர்களும் இதை ஒரு இஸ்ரேலிய சதியாகவே சித்தரித்தனர்.ஆனால் ஒரூ சில நாட்களுக்கு உள்ளாகவே உண்மை நிலவர ஒசாமா வடிவில் உலக்குக்கு அறிமுகமாகி ஜிஹாதிகளின் உண்மை உருவத்துக்கு எந்தவித களங்கமும் இல்லாமல் வெளிகொணர்ந்தது.
 
 
சரி இது போலவே இன்றைய சூழ்நிலையும் அது போலத்தான்.வெட்ட வெளிச்சமாக தெரியும் உண்மைகளை ஜீனியர் விகடன் ஒன்று மறைத்து தள்ள முடியாது.எதோ அவர்கள் மற்ற பத்திரிக்க்கை போலவே செய்தி வெளியிட்டால் ஒரு பரபரப்பு இருக்காது.கொஞ்சம் மாற்றி சந்தேகத்தை சீனாவின் சதி என்றொ,ரஷ்யாவின் தலையீடு என்றோ தலைப்பிட்டு கட்டுரை போட்டால் உடனே மக்கள் அதிகமாக வந்து பார்வையிடுவார்கள் அல்லவா.அதுக்குத்தான் இந்த இஸ்ரேலிய,அமேரிக்க சதி என்ற ஜிவியின் கட்டுரை.
 
 
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
 
உணர மறுக்கும் தேசம்

 

 

இஸ்லாமிய

அடிப்படைவாதத்தின் நீண்டகால பலிகடாவாக தொடரும் ஒரு தேசத்தின் மெத்தனத்தை ஜெய்பூர் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் அம்பலமாக்கியுள்ளன.

எஸ்.பிரசன்னராஜன்
 
 
சம்பவம் நடந்த மறுநாள் எழும் வழக்கமான ஆத்திரம் அடங்கிவிடும்.அதேபோலத்தான் யார் இதை செய்தார்கள் என்ற தேடலும்.சடுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான நகர்களில் ஜெய்பூர் பெயரும் எழுதப்பட்டுவிட்டது.மீண்டும் நாம் மரத்துப்போய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவோம்.நாளை மற்றொரு நகரம்.இன்னும் சில சிதறிய உடல்களின் பிம்பங்கள் டிவியில் காட்டப்படும்.இப்போதைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொடுரத்தை தடுக்கும் அரசியல் உறுதியில்லாத ஆளும் வர்கத்தின் அபத்தப் பேச்சுகளை நாம் சகித்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.இந்திய தாக்குதலுக்குள்ளாகிறது.இந்தக் கோர சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு மாயைதான் என்பதை மீண்டும் உணர்த்த ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் ரத்தக்களறியான காட்சிகள் நமக்கு தேவையா?நமது எதிரி எதோ முகம் தெரியாத முகாமில் இருக்கவில்லை.நமது தாராள ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி அவன்.அந்த எதிரியின் விசுவாசம் அவனது தேசத்திற்கல்ல,ஒரு கோபமான கடவுளுக்கே அது உரித்தானது.ஜிகாதிகளுக்கு இந்தியா என்பது சொர்கத்திற்குப் போக மிகவும் சுலபமான,அதிக எதிர்ப்பில்லாத ஒரு வழியாக மாறியிருக்கிறது......................
 
 

தில்லி 2005, மும்பை 2006 ஹைதராபாத் 2007, போதாக் குறைக்கு செப் 11 தாக்குதல்கள் நடந்த மூன்றே மாதங்களில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல். இத்தனைக்குப் பிறகும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுள் தானும் ஒன்று என்பதை ஏன் இந்தியா உணர மறுக்கிறது? இதற்கான விடை ஜிகாதின் டோரா போரா யுகத்தில் ஷியச
கிடைக்கும். அப்போது காஷஷ்மீரப் பகுதிகளுக்குள் பயங்கரவாதத்தின் குரூரம் குமுறிக்கொண்டிருந்ததால் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் எரிந்து வீழ்ந்ததும்தான் அந்த நாடு புதிய தீமையை எதிர்கொள்ளத் துணிந்தது. அந்தத் 'தீமை" நமக்கு ஏற்கனவே சிறய அளவில் பரிச்சயமானதுதான். இருப்பினும் செப் 11 உலகையே மாற்றியமைத்தது என்பது உண்மை. பயங்கரவாதம் குறித்த அச்சத்தை உலகளாவியதாக்கியது அந்த சம்பவம். அமெரிக்கா சோகத்திலும் ஆத்திரத்திலும் வெகுண்டு எழுந்தபோது அந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வுகளுக்கு கட்சிச் சாயம் பூசப்படவில்லை. பாதிக்கப்பட்டவுடன் எதிரியை நோக்கி 21 ம் நூற்றாண்டின் முதல் யுத்தத்தை, நியாயமான யுத்தத்தை அந்த நாடு முடுக்கி விட்டது. சதாமின் மெசபடோமியாவுக்குப் பிறகு என்னதான் தறிகெட்டுப்போயிருந்தாலும் ஜார்ஜ் ஷியச
புஷ்ஷுக்கு தார்மீகப் போராளி என்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள அங்கீகாரத்தை நாம் மறுக்க முடியாது.


    மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளுக்கு நாம் அமெரிக்கர்களைப் போலவோ, இஸ்ரேலியர்களைப் போலவோ பதிலடி தருவதில்லை. நமது தேசம் தீவிர கண்காணிப்புள்ள தேசம் அல்ல. இங்கு இடது தாராள இந்தியாவின் சில முகாம்களில் எப்படி தேசப்பற்று என்பது கெட்டவார்த்தையோ அதே போலத்தான் தேசியவாதம் என்பதும் ஒரு ஆபாசமான வார்த்தை. மத்திய அரசு 'பொடா" சட்டத்தை அரக்கத்தனமனது" என்று சொல்லி நீக்கிவிட்டது. ஆனால் அதற்கு மாறாக என்ன சட்டத்தை கொண்டுவந்தது? இந்த அரசு மனிதாபிமானம் என்ற பெயரில் ஏதோ பயங்கரவாதிகளின் அடிப்படை உரிமைகள் எதுவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று பயப்படுவதுபோலத் தெரிகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பயங்கரவாதம எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிருக்கின்றன. இருந்தாலும் அவற்றுக்கு ஜனாதிபதியின் அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை. ஆனால் அத்தகைய சட்டங்கள் காங்கிரஸ் ஆளும் மஹாராஷஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அமலில் இருக்கின்றன. ஜெய்ப்பூர் கொடுமைச் சம்பவங்களையடுத்து தேசிய பாதுகாப்புக்கான முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டும்படி நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கையை, 'மரண வியாபாரியின் பிதற்றல்" என்று இந்த ஐ.மு.கூ அரசு ஒதுக்கித் தள்ளி விடுமா? இங்கே யார் அரசியல் ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

  அந்த அரசியல் சிறுபான்மை அரசியல்தான், தேசியப் பாதுகாப்பை பலிகடாவாக்கினாலும் பரவாயில்லை, தங்கள் வாக்கு வங்கிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடும் அரசியல் ஆட்டம் அது. பயங்கரவாதத்திற்காக மரண தண்டனை பெற்ற அஃப்சல் குருவை அப்படியே விட்டுவைப்பதன் மூலம் சிலரை சமாதானப்படுத்தலாம் என்று நினைக்கிறது அரசு. ஆனால் அது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் முனைப்பாக இல்லை என்பதையே இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இத்தகைய அரசு, பயங்கரவாதத்தின் பெயரைக் கூடக் குறிப்பிட மறுக்கிறது. 'இந்தியக் குடும்பங்கள் படும் அவஸ்தையை நேற்றிரவு டி.வியில் பார்த்துவிட்டு என்னால் துஷ}ங்கவே முடியவில்லை. இந்தியர்களையோ, பாகிஸ்தானியர்களையோ பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்துவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் தான. அவர்கள் எந்த சமூகத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல." பெங்களுரு தொடர்புள்ள கிளாஸ்கோ பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு நமது பிரதமர் மன்மோகன் சிங் சொன்னவை அவை ( அது சரி, ஜெய்ப்பூர் கோரங்களை டிவியில் பார்த்த பிறகு அவர் சரியாகத் துஷ}ங்கினாரா?). பயங்கரவாதிக்கு மதம் கிடையாது என்ற பொய்யை ஒரு பயங்கரவாதி கூட ஏற்கமாட்டான் இன்று பயங்கரவாதத்திற்கு மதம் இருக்கிறது. அப்படி மதத்தின் பெயரைச் சொல்வதாலேயே ஒட்டு மொத்த முஸ்லீம் மக்களையும் குறிப்பிடுவதாக ஆகிவி;டாது.

   தேசிய துக்கம் கூட நம்மை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது. ஜெய்ப்பூர் சம்பவங்களால் கூட அது முடியவில்லை. ஒருவரை ஒருவர் சாடும் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மற்றவர்கள் எல்லோரையும் விட உன்னத தேசியவாதியாகக் காட்டிக்கொள்ளும் பா.ஜ.க இந்த பிளவை அதிகரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது. ரத்தக் காயங்களுடன் இருக்கும் இந்தியவால் அரசியல் ஒற்றுமை இல்லாவிட்டால் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைகளுக்கு எதிராக சரியாக போராட முடியாது. நமக்கு கோபம் போதாது. இந்தியாவை திரும்பத் திரும்ப ஏமாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு அரசியல் வர்க்கத்தைப் பொறுத்தவர் பரபரப்பான சாலைகளில் சில உடல்கள் சிதறிக் கிடப்பது என்பது தவிர்க்க முடியத இடறல்கள் . அவ்வளவுதான்.

 

மே 26 இந்தியா டுடே

 

http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_05.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails