ஐரோப்பிய கால்பந்து: அரை இறுதியில் துருக்கி பெனால்டி ஷுட்டில் குரோஷியாவை வீழ்த்தியது
வியன்னா (ஆஸ்திரியா),ஜுன். 21-
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ் திரியா, சுவிட்சர்லாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது கால் இறுதி ஆட்டம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நள்ளிரவு நடந்தது. `பி' பிரி வில் முதல் இடத்தை பிடித்த குரோஷியா- `ஏ' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த துருக்கி அணிகள் மோதின.
இரு அணி வீரர்களுமே துடிப்புடன் ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை இரு அணி வீரர்களும் தவற விட்டனர். முதல் பாதி ஆட்டத்திலும், 2-வது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இத னால் கூடுதல் நேரம் கொடுக் கப்பட்டது.
கூடுதல் நேரத்தில் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. 119-வது நிமிடத்தில் குரோஷியா கோல் அடித்து 1-0 என்ற முன்னிலை பெற் றது.
இவான் கிளாஸ்னிக் தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இந்த கோல் அடிக்கப்பட்ட போது ஆட்டம் முடிய 2 நிமிடமே (காயம் நேரத்தையும் சேர்த்து) இருந்தது. ஆட்டம் முடிவடைவதற்கான கடைசி நிமிடத்தில் துருக்கி பதில் கோல் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. செமித் சென்டிரிக் இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.
இதனால் வெற்றி- தோல்வியை முடிவு செய்ய பெனால்டி ஷுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் துருக்கி 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. துருக்கியின் வெற்றிக்கு கோல் கீப்பர் ருஸ்து ரிசெபர் முக்கிய பங்கு வகித்தார்.
பெனால்டி ஷுட்டில் துருக்கி அணியில் அர்தா துரன், செமித் சென்டிரிக், ஹமித் அல்டின் டாப் ஆகி யோர் வாய்ப்பை தவற விடாமல் கோல் அடித்தனர். குரோஷியா அணியில் டார்ஜியோ மட்டுமே கோல் அடித்தார். லுகா மோட்ரிக், இவான் ரகிட்டிக் ஆகியோர் வாய்ப்பை தவற விட்டனர். இவர்கள் அடித்த பந்தை துருக்கி கோல் கீப்பர் ரிசெபர் அருமையாக தடுத்தார்.
துருக்கி அணி அரை இறுதியில் ஜெர்மனியை 25-ந் தேதி எதிர் கொள்கிறது.
No comments:
Post a Comment