Friday, June 27, 2008

யூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்

யூரோ 2008 அரையிறுதி: ரஷ்யாவை வென்றது ஸ்பெயின்
யூரோ 2008 கால்பந்து அரையிறுதியில் ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஆட்டத்தின் இடைவேளை வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாத நிலையில், 50-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஸாவி தனியாக பந்தை கடத்தி, ரஷ்யாவின் பெனால்டி பகுதிக்குள் கொண்டு சென்று கோலாக மாற்றினார்.

டேவிட் வில்லாவிற்கு பதிலாக களமிறங்கிய ஃபேபர்காஸ், ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் ரஷ்ய தடுப்பு வீரர்களை சாதுர்யமாக எதிர்கொண்டு, ஒரு ஷாட்டை லேசாக தூக்கி அடிக்க அதனை குய்சா கோலாக மாற்றினார்.

அதன்பின் 3-வது கோலுக்கு வழிவகை செய்தவரும் ஃபேபர்காஸ்தான். இவர் படு வேகமாக பந்தை எடுத்து சென்று சில்வாவிடம் அடிக்க, சில்வா அதனை 3-வது வெற்றி கோலாக மாற்றினார்.

ஜெர்மனியும் ஸ்பெயினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோதுகின்றன.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails